Ad Space avaiable

(இரு சம்பவங்கள்) ஒரு பாடசாலை மாணவி விஷ அருந்தி சடலமாக மீட்பு. மற்றொருவர் பன்னிப்பிட்டிய மேம்பாலத்தில் இருந்து குதித்தார்.


வெலிமடை, கரகஹாஉல்பத பகுதியில், விஷம் அருந்திய 17 வயதான பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது தந்தையின் கண்டிப்பினால், கோபம் அடைந்த மாணவி  விஷம் அருந்தியுள்ளார். இந்த விஷம் உடல் முழுவதும் பரவியமையினால், உயிரிழந்துள்ளதாக, பிரேத பரிசோதனையிலிருந்து தெரிய வந்துள்ளது.

அதேவேளை, கொழும்பு, பன்னிப்பிட்டிய மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த பாடசாலை மாணவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11ஆம் தரக் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு மேம்பாலத்தில் இருந்து, இன்று காலை குதித்துள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி, பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என, தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை அம்மாணவி  பன்னிப்பிடிய பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகிலுள்ள மேம் பாலத்தினூடாக சென்று கொண்டிருந்த வேளை தவறுதலாக   விழுந்ததாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
(இரு சம்பவங்கள்) ஒரு பாடசாலை மாணவி விஷ அருந்தி சடலமாக மீட்பு. மற்றொருவர் பன்னிப்பிட்டிய மேம்பாலத்தில் இருந்து குதித்தார். (இரு சம்பவங்கள்) ஒரு பாடசாலை மாணவி விஷ அருந்தி சடலமாக மீட்பு. மற்றொருவர் பன்னிப்பிட்டிய மேம்பாலத்தில் இருந்து குதித்தார். Reviewed by Madawala News on 6/27/2017 01:37:00 PM Rating: 5