Ad Space Available here

தயாராகுவோம் தற்காப்புக்காக.


தூரத்தில் கேட்ட மரண ஓலங்கள் இன்று! இனவாதமாக எம் காலடியை எட்டியுள்ளன.

ஆம்... இதுவரைக் காலமும் அயல் நாடுகளில் எம் உம்மத்தினரின் அழுகுரல்களே எம் காதுகளை துளைத்தன. தூரத்து அவலங்களே வீடியோக்களாக கண்களை கண்ணீரால் நனைத்தன. இன்று அந்நிலமை எம் காலடி வரை வந்து விட்டது.

நாட்டுக்கு நாடு இவ்வும்மத்தின் இரத்தத்தை குடித்த மனிதமற்ற அரக்கர்கள்(?) வரிசையில் நம் நாட்டின் ஞானசார உருவெடுத்துள்ளார்.

*இந்த இனவாதி கத்தும் ஓசைகள் வெறும் ஓசையாகவே நித்தமும் இருக்கும் என நாம் நம்பினால்! உலக வரலாற்றைப் பற்றிய அறிவு நமக்கு போதாது என்பதே பொருளாகும்*.

ஏனெனில்! வரலாற்றில் உருவான இனக்கலவரங்கள், இனச்சுத்திகரிப்புகள் அனைத்தினதும் பின்னனியில் சமூக அங்கீகாரமற்ற ஒருவனால் ஆரம்பிக்கப் பட்டு கால ஓட்டத்தில் சமூக மயமாக்கப் பட்ட நிலையே பதிவாகியிருகின்றன.

நம்நாட்டு இனவாதமும், அசின் விராதுவின் சர்வதேச இனவாதமும் பினைக்கப் பட்டுள்ளமையும், அண்மைக்கால சர்வதேச நிகழ்வுகளிலும் இக்கூற்றுக்கான சான்றுகள் தெளிக்கப் பட்டுள்ளன என்பதை அறிவுடையோர் உணர்வர்.

இவ்வகையில் எமது நாட்டில் முளைத்துள்ள இனவாதமும் முளைத்த இடத்திலிருந்து மெதுமெதுவாக வழர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதே உண்மை.

நாம் எண்ணிப் பார்க்காதவர்களால் கூட இவ்வினவாத விருட்சம் பசளையிட்டு வளர்க்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனவா என்ற ஐயமும் மேலோங்கி வருகின்றன.

எது எவ்வாறாயினும் ஞானசாரவின் இனவாதத்தீ இடைக்கிடை அனைந்தது போல் தோற்றமளிப்பதானது! "எவ்வாறு தீயின் தனல் உள்ளே மறைந்து காற்றடிக்கும் போது தீயாக மாறும் பணியை செய்து வருகின்றதோ, அவ்வாறே! இனவாதமும் தம்பணியை அமைதியாக காரியமாற்றி, சந்தர்ப்பம் அமையும் போது தீயாக கக்குவதற்கான ஏற்பாடுகளை கச்சிதமாக  செய்து வருகின்றன என்பதே கடந்த கால அடையாளங்களாக உள்ளன.

பாவம் எம் சமூகம் நன்றாக ஏமாறப் பழகி விட்டது. வெளிப்படையானதை மட்டுமே நம்பிக்கை கொள்ள துனிந்து விட்டது. ஆதலால்தான் அவ்வப்போது அனல் கக்கும் இனவாத செயற்பாட்டின் பாதிப்புகளின்போது சுதாரித்துக் கொள்ளும் இச்சமூகம், அடுத்த நகர்வில் ஆழ்ந்து தூங்கி விடுகிறது.

இடைக்கிடை ஏற்படுத்தப் படும் சிறுசிறு இனவாத முன்னெடுப்புகளானது! யுத்த தந்திர முறைமையில் பார்ப்பதாயின்! *"தமதும் எதிரியினதும் தகைமை பரிசீலித்தலாகவே கணிக்கப் படும்"*.

அவ்வகையில் எம் சமூகத்தின் பலம், பலவீனம் ஆகியவை பலமுறைகளில் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

*உணர்வதென்றால் என்ன?*

உணர்வதென்பதானது இடத்துக்கிடம், செயலின் தாட்பரியத்திற்கேற்ப வேறுபடும். உபதேசத்தை உணர்வதும் எச்சரிக்கையை உணர்வதும் ஒன்றாகாது. அதே போன்றுதான் உபதேசத்தி்ன் பின்னர் எம்மை தயார் படுத்த வேண்டிய வழிமுறைகளும், எச்சரிக்கையின் பின்னர் எம்மை தயார் படுத்த வேண்டிய வழிமுறைகளும் ஒன்றாகாது.

ஆனால் இத்தாட்பரியத்தை உணராத எம்மவர்கள் தன் பாதத்தைக் காக்கும் பாதனிக்காக செலவழித்து செய்யும் முயற்சியைக் கூட! தம் உயிர்,உடமை,உம்மத்தின் பாதுகாப்புக்காக செய்யத் தவறி நிற்பதானது பின்வரும் நபிமொழயையே நினைவூட்டி நிற்கின்றது.

*நபிகளார் கூறினார்கள்*.
“ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்”.

அப்போது அங்கிருந்த ஒருவர், “(அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார்.

அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் *சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள்*. உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் *வஹ்ன்* குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள்.

*வஹ்ன்* என்றால் என்ன?” (அல்லாஹ்வின் தூதரே )என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள்.

நூல்:- அபூதாவூத்- 4297

நபிகளார் எச்சரித்த அந்தக் காலத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. (அல்லாஹ் மிக அறிந்தவன்).

*வஹ்ன்* எனும் உலகப்பற்று எம் சமூகத்தை பிடித்தாட்டும் பயங்கர வியாதியாக மாறிவிட்டது என்பது மிகத் தெளிவாக உணர முடிகிறது. *தனக்கு நாடுவதை பிற சகோதரனுக்கும் நாடாத வரையில் ஒருவன் உண்மையான முஃமினாக முடியாது* எனும் மார்க்கத்தின் வழிவந்த நம்வர்களது சமகால நிலையானது, அடுத்த சகோதரனையோ, சமுதாய அமானிதங்களையோ  கவனத்தில் எடுக்காத சுயநல வாழ்வில் மூழ்கிப் போயுள்ள நிலையாகவே உள்ளது.

எம் உள்ளங்களில் புற்றுநோயாக தாக்கம் செலுத்தியுள்ள இந்த வஹ்ன் எனும் தீய குணத்தை நம்மை விட்டும் துரத்தியே ஆக வேண்டும். நம்மையும் நம் சமூகத்தையும் அழிவில் இருந்து காக்க நாம் முன்னெடுக்க வேண்டிய தயாரிப்புகளில் மிக அடிப்படை அவசியமானதில் முதலாவது இதுதான்.

சுகபோக வாழ்க்கை போதையாக தலைக்கேறி வஹ்ன் எம்மை தோற்கடித்து விட்ட காரணத்தினால்தான் 51 முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட்டு உலக முஸ்லிம்களின் அவலங்களுக்குக் குரல் கொடுத்து அவர்களது உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் தவிக்கிறோம்!

*இஸ்லாத்தின் பார்வையில் இம்மை*

மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்வின் ஒட்டு மொத்த இன்பமும் மிக மிக சொற்மானதே! இதை அல்லாஹ்வும் அவனது தூதர் அவர்களும் தெளிவாக கூறுகிறார்கள்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَا لَـكُمْ اِذَا قِيْلَ لَـكُمُ انْفِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اثَّاقَلْـتُمْ اِلَى الْاَرْضِ‌  اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْاٰخِرَةِ‌  فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِى الْاٰخِرَةِ اِلَّا قَلِيْلٌ‏ 
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
(அல்குர்ஆன் : 9:38)

*நபிகளார் கூறினார்கள்*.
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த – அதாவது சுட்டு – விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் தொடுவது போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (சுவனத்துடன் ஒப்பிடும் போது இதுவே இம்மையின் இன்பமாகும்.)

நூல் :முஸ்லிம் (5490)

தன் ஆத்மாவோடு போரிட்டு வெல்ல முடியாத கோழைகளாக நாமிருக்கும்வரை எதிரியை வீரத்தோடு எவ்வாறு சந்திக்கப் போகிறோம். வஹ்ன் எனும் ஷைத்தானியத்தை நாம் வெல்லாதவரை! அன்னியர்கள் நம்மைக் குறிவைக்கும் இந்த ஆபத்தை எந்த வகையிலும் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்தே ஆக வேண்டும்.

மாறாக! அரசியல் வாதிகளையும், முஸ்லிம் நாடுகளையும், தலைமைகளின் வாக்குறுதிகளையும் நம்பிக் கொண்டு பொறுப்பின்றி பயணிப்பதானது! தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திப் பார்ப்பதற்கு ஈடானதாகும்.

*இருதியாக!*

யாரெல்லாம் எம் உடமைகளும், உயிர்களும், பெண்களது கற்புகளும்  இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்குள் சிக்கிவிடக் கூடாது என  உண்மையாக உணர்கிறீர்களோ! அவர்கள் தயவு கூர்ந்து வஹ்ன் எனும் ஷைத்தானியத்திலிருந்து வெளிவர திடசங்கட்பம் கொள்வீர்களாக. அத்திடசங்கட்பத்தின் வெற்றிக்காக அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக. இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்து வந்த பாவங்களுக்காக மனமுருகி பாவமன்னிப்பும் வேண்டுவீராக. இவற்றுடன் எம் மார்க்கம் வழிகாட்டியுள்ள அமைப்பில் தற்காப்புக்கான ஏற்பாடுகளை கச்சிதமாக செய்வீராக.

சமூகத்தின் பாது காப்புக்காக செல்வந்தர்கள் தம் செல்வங்களை செலவு செய்வதானது! நாளை ஒருநாள் அதுவே அவர்களது உடமைகளையும் காக்கும் அரணாக அமையலாம் என்பதை செல்வந்தர்கள் உணரட்டுமாக.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்மழையானது இனவாதத்தை கழுவிச் சென்று விட்டதாக எவரும் தவறாக எடை போட்டு விடாதீர்கள். மாறாக! வேகமாக எறிந்த இனவாதத் தீயின் கோரத்தையே இம்மழை சற்று அனைத்துள்ளது என்பதை உணர்வீராக. மீண்டும் மழை ஓய்ந்து காற்றும் வீசினால் இவ்வினவாதத்தீ கொழுந்து விட்டெரிய வாய்ப்புண்டு. *அல்லாஹ் பாதுகாப்பானாக*

رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ 
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

அபூ ஸுமையா - மடவளை பஸார். 01-06-17
தயாராகுவோம் தற்காப்புக்காக. தயாராகுவோம் தற்காப்புக்காக. Reviewed by Madawala News on 6/02/2017 09:44:00 AM Rating: 5