Kidny

Kidny

சகல வளங்களையும் கொண்ட தோப்பூர் பிரதேச மக்கள் வரலாற்றில் அடைந்து வரும் துன்பங்கள்.


தோப்பூர் பிரதேசமானது சகல வளங்களையும் கொண்ட  பிரதேசமாகும். இங்குள்ள மக்கள் கல்வியில் வளர்ச்சி கண்டிருந்ததோடு
மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு முன்னர் பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தைக் கண்ட பிரதேசமாகும்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இங்குள்ள முஸ்லிம்களின் பொருளாதாரம் நசுக்கப்பட்டதுடன் அவர்களின் விவசாயம்(சேனைப்பயிர்ச்செய்கை,நெற்பயிர்ச்செய்கை,ஆடு,மாடு வளர்ப்பு) செய்து  வாழ்ந்த பிரதேசங்களான தாயிப் நகர்,சீனன்வெளி,நல்லூரில் சில பகுதி,இக்பால் நகர்,உப்பூரல் ,உள்ளைக்குளம்,ஆவியா குளம்,தேக்கன் சோலை,பட்டியடி, பினாட்டுக்கல்,முதலைப்பாளி,
செல்வநகர்  நிணாக்கேணி, விலாங்குளம்,புல்லாந்திக்குளம்  பம்பன் குளம், போன்ற பகுதிகள் 30  வருடங்களாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அங்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதனை  இங்கு நினைவு கூறலாம்.

மேலும் யுத்தம் நடந்த காலப்பகுதியில் முஸ்லிம்களின் கால் நடைகள் அனைத்தும் விடுதலைப்புலிகள் வசமாகின
கடலையும்,காட்டையும் ஜீவனோபாயத்திற்காக நம்பி வாழ்ந்த தோப்பூர் முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளுக்கு கப்பம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது .

மேலும்  வசதிபடைத்தவர்கள், அரச தொழிலில் ஈடுபட்டவர்கள்,சாதாரண குடும்பத்தினர் ,வறுமை காரணமாக வெளிநாடு சென்று உழைத்தவர்கள் இணங்கன்டு கடத்தப்பட்டு கப்பமாக பெரிய பணத்தொகை கேட்கப்பட்டது. கடத்தப்பட்டவர்கள் அவர்களுடைய  பொருளாதாரத்தை விற்று  அவர்களிடம் இருந்து மீண்டு வந்தனர்.அத்தோடு பல சொத்தும் அவர்களால் கொள்ளையிடப்பட்டது.
உயிர் அச்சுறுத்தல் மேலோங்கிக் காணப்பட்டது.

மேலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் தொழில் நிமித்தம் சென்று வந்த முஸ்லீம்கள் படையினரால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டனர்.அதேபோல் விடுதலைப்புலிகளும் இவர்களை சந்தேகக்கண் கொண்டு பார்த்தனர், இவர்கள் இருவருக்கும் இடையில் முஸ்லீம்கள் சிக்குண்டு நசுக்கப்பட்டனர், பல அப்பாவி உயிர்கள் எவ்வித குற்றங்கள் செய்யாமல் காவு கொள்ளப்பட்டன ,பலர் காணாமல் போயினர்.

இவ்வாறு சொல்லென்னா துயரங்களோடு வாழ்ந்த மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது தனது சொந்த இடங்களைப் பார்வையிடச் சென்ற முஸ்லீம்களின் வருகையைப் பொறுக்காதவர்கள்,2003 ம் ஆண்டு தமிழ் முஸ்லீம் இணப்பிரச்சிணையை உருவாக்கினர் இதில் பல முஸ்லீம்களின் உயிர் பறிக்கப்பட்டதோடு பொருளாதாரமும் நசுக்கப்பட்டது.
மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு படிக்க முடியாமலும்,பரீட்சை  எழுத மூதூருக்கு செல்ல முடியாமல் இராணுவ கவச வாகணங்களில் மறைந்து சென்று பரீட்சை எழுதிய மாறாத வடு இற்றைவரை இருந்து கொண்டிருக்கின்றது.

அதேபோல் 2005ம் ஆண்டிலும் இணக்கலவரம் தூண்டப்பட்டு மேற்கூறிய அதே துர்ப்பாக்கிய
நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

பின்னர் மாவிலாறு  மூடப்பட்டு ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டன,மணிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நீர் இல்லாமல் ஆகியது.
இந்தவகையில் பொருளாதாரம் நசுக்கப்பட்டதோடு விடுதலைப்புலிகள் இப்பிரதேசங்களை ஊடுருவி யுத்தம் உக்கிரமடைந்து தோப்பூரை விட்டு மக்கள் வெளியேறி கந்தளாயில் அகதிகளாக ஆக்கப்பட்டனர்.

யுத்தம் நிறைவடைந்து சொந்த இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதில் பல சிரமங்களை இற்றை வரை பெற்று வருகின்றனர்.
யுத்தத்தினால் நாங்கள் ,எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த பகுதிகள் காடுவளர்ந்த நிலையில் அந்த இடங்களை மீள் புணர்மானம் செய்ய பல சிரமங்களை எதிர் கொண்டு வரும் இவ்வேளையில்
முஸ்லீம்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதை பொறுக்காத பொறாமை எனும் வஞ்சனை கொண்டவர்களால் திட்டமிட்டு பல சூழ்ச்சிகள் இடம்பெற்றதோடு அதன் நிகழ்ச்சி நிரலை நாம் இன்று கண்டு கொண்டிருக்கின்றோம்.

முஸ்லீம்களை வண்முறையாளர்கள்,தீவிரவாதிகள் ,கொடூரர்கள் என்று சித்தரிக்கும் சித்த வேலைகளை சித்தரித்து திட்டமிட்டு நிறைவேற்றுகின்றனர்.

யுத்த காலத்தில் அப்பாவித் தமிழ் மக்களும் நிறையவே பாதிக்கப்பட்டிருந்தை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம்.

அந்தக்  காலப் பகுதியில் பல அப்பாவித் தமிழ் மக்களுக்கு தோப்பூர் மண் அடைக்கலம் கொடுத்ததை இன்றும் பலர் நண்றி உணர்வுடன் பார்க்கின்றனர்.சிலர் அதை மறந்து பேசுகின்றனர்.

எனவே நாங்கள் அரசாங்கத்திற்கோ எந்த இன மக்களுக்கோ பிரச்சினையாக இருந்ததில்லை நாட்டில் சமாதானத்திற்காவும்,சகவாழ்விற்காகவும் புரிந்துணர்வுடன் மனித நேயத்துடனேயே வாழ்ந்து வருகின்றோம்.எங்களது மார்க்கமும் அதனையே வழிகாட்டியுள்ளது.

இந்த நிலையை மாற்றுமத சகோதரர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் எந்த மதத்தினராக இருந்தாலும் ஒவ்வொருவரும்
குறோத உணர்வுகள் இல்லாத நல்ல சிந்தனையோடு செயல்படுதன் மூலமாகவே சமத்துவமும்,  சகவாழ்வும் நிலைத்திருக்கும்.

முஸ்லிம்களாகிய நாங்கள்
மார்க்கவழி நடந்து ஏனையவர்களுக்கு படிப்பினையாக இருப்பதே எமக்கு கிடைக்கும் வெற்றியாக நினைக்கின்றோம்.

நிதானமாக செயற்படுவோம்,
பொறுமையையும், அமல்களைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடி சூழ்ச்சியை  முறையடிப்போம்.  அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றான்.

(فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا)
[Surat Al-Sharh 5]
" நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது"

M.I.M.Faheem -
சகல வளங்களையும் கொண்ட தோப்பூர் பிரதேச மக்கள் வரலாற்றில் அடைந்து வரும் துன்பங்கள். சகல வளங்களையும் கொண்ட தோப்பூர் பிரதேச மக்கள் வரலாற்றில் அடைந்து வரும் துன்பங்கள். Reviewed by Madawala News on 6/06/2017 02:30:00 PM Rating: 5