Ad Space avaiable

வளைகுடாப் போர் – அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரகடனம்.


Muja ashraff-

1991-இல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடாப் போரை அறிவித்த ஜார்ஜ் புஷ் “அடுத்த அமெரிக்க நூற்றாண்டு துவங்கி விட்டது’ என்றார்.

அமெரிக்க நூற்றாண்டின் துவக்கம் இரண்டு லட்சம் ஈராக்கியர்களை உடனே கொன்றது. அங்கே வீசப்பட்ட அணு ஆயுதங்களும், பொருளாதாரத் தடையும் பல லட்சம் மக்களை ஆண்டுதோறும் கொன்று வருகின்றன. போர்ச் செலவை குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலையில் கட்டியதுடன் ஈராக் மீது தண்டத்தொகை விதித்து வசூலித்து வருகிறது அமெரிக்க அரசு.

1991-இல் ஈராக் ஆக்கிரமிப்பு; 1992-இல் அமைதியை நிலைநாட்ட சோமாலியாவில் தலையீடு; 1992-இல் யூகோஸ்லாவியா மீது கப்பற்படை முற்றுகை; 1993-இல் போஸ்னியாவில் குண்டு வீச்சு 1994-இல் ஹெய்தியில் பொம்மையாட்சியை நிறுவுவதற்காகத் தலையீடு; 1995-இல் குரோஷியாவில் குண்டுவீச்சு 1996-இல் காங்கோவில் சர்வாதிகாரி மொபுடுவைக் காப்பாற்ற இராணுவத் தலையீடு; 1997-இல் லைபீரியாவிலும், அல்பேனியாவிலும் வெளிநாட்டவர்களைக் காப்பாற்றுவது என்ற பெயரில் தலையீடு; 1998- இரசாயன ஆயுதம் தயாரிப்பதாகப் பொய்க் குற்றம் சாட்டி சூடான் மீது ஏவுகணைத் தாக்குதல்; பின்லாடனின் முகாமைத் தாக்குவது என்ற பெயரில் ஆப்கான் மீது ஏவுகணைத் தாக்குதல்; 1998 இரசாயன ஆயுதம் தயாரிப்பதாகப் பொய்க்குற்றம் சாட்டி ஈராக் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 1999-இல் யூகோஸ்லாவியா மீது படையெடுப்பு, அணு ஆயுதத் தாக்குதல்; 2000 ஏமனில் அமெரிக்கக் கப்பல் தாக்கப்பட்டதற்காகக் கடற்படை மிரட்டல்; 2001 மாசிடோனியாவில் அமைதி ஏற்படுத்த இராணுவத் தலையீடு;
ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா,சிரியா என நீண்டு செல்கின்றது

உலகில் எல்லா மூலைகளிலும் அமெரிக்க இராணுவத் தளங்கள் உலக மக்களை அச்சுறுத்துகின்றன. ஐரோப்பாவில் ஒரு லட்சம் துருப்புகள், பசிபிக் கடலில் ஒரு லட்சம் துருப்புகள், வளைகுடாவில் 25,000 துருப்புகள், இந்துமாக் கடலில் கடற்படைத்தளம், பிலிப்பைன்சில் தளம், தென் கொரியாவில் தளம், ஜப்பானில் டோக்கியோ நகரம் உள்ளிட்டு எங்கும் அமெரிக்க இராணுவத்தின் ‘பாதுகாப்பு’!

ரசியாவின் வீழ்ச்சிக்குப் பிறகுப் பிறந்திருக்கும் புதிய அமெரிக்க நூற்றாண்டில் அமெரிக்க அரசின் உலகக் கடமையையும் தொழிலையும் பற்றி சிகாகோ டிரிப்யூன் என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நாளேடு கீழ்க்கண்டவாறு பொருள்பட எழுதியது:

ஒரு அடியாள் படையாகச் செயல்பட நாம் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்புச் சந்தையில் (அதாவது இராணுவ வலிமையில்) நாம் பெற்றிருக்கும் ஏகபோக வலிமையை, நமது போட்டியாளர்களுக்கு (ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள்) விற்பதன் மூலம், உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது நம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.

வளைகுடாப் போர் – அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரகடனம். வளைகுடாப் போர் – அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரகடனம். Reviewed by Madawala News on 6/11/2017 11:39:00 AM Rating: 5