Kidny

Kidny

மறு காலனியாக்கம்!


Muja ashraff 
உலக சமாதானம் என்று கூறி மறுகாலனியாதிக்கத்தை கட்டவழித்து விடும் அமெரிக்க அரசு
அமெரிக்க-சோவியத் வல்லரசுகளுக் கிடையேயான பனிப்போரும் பதிலிப் போர்களும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே, 80-களின் துவக்கத்திலிருந்தே பொருளாதார அரங்கில் ரசியா தோற்கத் தொடங்கிவிட்டது. உலகவங்கி, ஐ.எம்.எஃப் போன்ற நிறுவனங்கள் ரசிய ஆதரவு நாடுகளில் கணிசமானவற்றைத் தம் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டன.

பன்னாட்டு நிறுவனங்களின் பூதாகார மான உலகு தழுவிய வளர்ச்சியானது உற்பத்தி, உழைப்புப் பிரிவினை, உழைப்புச் சந்தை, மூலதனம் ஆகிய அனைத்தையும் உலகமயமாக்கத் தொடங்கிவிட்டது. விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்தப் போக்கை மேலும் விரைவுபடுத்தியது. ஒரே உலகச் சந்தைக்கும். அதனைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் உலக வர்த்தகக் கழகத்துக்குமான அடிப்படை உருவாகிவிட்டது.

ஆனால் பொருளாதார ரீதியில் உலக நாடுகளின் மீது தனிப்பெரும் மேலாண்மை செலுத்தும் நிலையில் அமெரிக்கா இல்லை. மாறாக, கடனாளியாக இருந்தது. ஜெர்மனி (ஐரோப்பிய ஒன்றியம்), ஜப்பான் போன்ற வல்லரசுகள் பொருளாதார ரீதியில் அமெரிக்காவை விஞ்சத்தொடங்கின.

கடனாளியான நிலையில், பனிப்போர் எதிரியான ரசியாவும் வீழ்ந்துவிட்ட நிலையில் அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளைக் குறைத்திருக்க வேண்டும்; மாறாக அதிகரித்தது.

உலகின் ஏழை நாடுகளையும், தனக்குப் பணிய மறுக்கும் நாடுகளையும், பிராந்திய வல்லரசுகளையும் மிரட்டித் தாக்கிப் பணிய வைப்பது தன்னுடைய சேவைக்கு மற்ற நாடுகளிடம் குறிப்பாக ஜப்பான், ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளிடமும் நேட்டோ கூட்டாளிகளிடமும் கப்பம் வசூலிப்பது என்ற ரவுடியின் வேலையை மேற்கொள்ளத் துவங்கியது.
மறு காலனியாக்கம்! மறு காலனியாக்கம்! Reviewed by Madawala News on 6/08/2017 03:55:00 PM Rating: 5