tg travels

ஒரே நாளில், பெண் உற்பட ஐந்து பேருக்கு மரண தண்­டனை தீர்ப்­ப­ளித்த நீதிமன்றம்.


வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் ஒரு பெண் உட்­பட 5 பேருக்கு ஒரே நாளில் வெவ்வேறு வழக்­கு­களில் மரண தண்­டனை தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்று கொலை வழக்­கு­களில் சம்­பந்­தப்­பட்ட எதி­ரி­க­ளுக்கே இவ்­வாறு வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் மரண தண்­டனை தீர்ப்பு வழங்­கி­யுள்ளார்.

இந்தக் கொலை வழக்­கு­களில் ஒன்­றா­கிய சுந்­த­ர­புரம் கொலை வழக்கில் கந்­த­சாமி சுகந்தன் என்­ப­வரை கொலை செய்த சம்­ப­வத்தில் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­பட்டு, தண்­டனை வழங்­கப்­பட்­ட­வர்கள் மூவரும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சுந்­த­ர­பு­ரத்தைச் சேர்ந்த குட்­டப்பன் வேலா­யுதம் அவ­ரு­டைய புதல்­வர்­க­ளான வேலா­யுதம் தினேஸ்­குமார், வேலா­யுதம் மனோராஜ் ஆகிய ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவ­ரு­டைய இரண்டு மகன்­மார்­க­ளுமே இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாவார்.

வவு­னியா மூன்­று­மு­றிப்பைச் சேர்ந்த பிர­பல ஐஸ்­பழம் வியா­பா­ரி­யா­கிய நிலமே ஆராச்­சிகே தர்­ம­கீர்த்தி என்­ப­வரை, உறங்­கும்­போது, அவர் உறங்­கிய அறைக்குத் தீமூட்டி கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்­பான மற்­று­மொரு கொலை வழக்கில் கொல்­லப்­பட்­ட­வ­ரு­டையை மனை­வி­யா­கிய  ஜயக்­கொடி ஆராச்­சி­லாகே ரோகிணி தம­யந்தி என்­ப­வ­ருக்கு வவு­னியா மேல் நீதி­மன்றம் மரண தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

வவு­னியா சாஸ்­தி­ரி­கூ­ழாங்­குளம் பகு­தியில் வீடொன்­றுக்குள் புகுந்து தங்­க­ந­கை­களைக் கொள்­ளை­ய­டித்­த­துடன் 19 வய­தான சிவ­குமார் இந்­து­மதி என்­ப­வரைக் கொலை செய்த சம்­பவம் தொடர்பில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட விஸ்­வ­நாதன் கன­க­ம­னோ­கரன் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.  

இந்த கொலைக்­குற்றத் தீர்ப்­புக்கள் வழங்­கப்­பட்ட ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நீதி­மன்­றத்தின் மின்­வி­ளக்­குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைவரும் எழுந்து நின்றனர். நீதிபதியும் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து தீர்ப்பை வாசித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரே நாளில், பெண் உற்பட ஐந்து பேருக்கு மரண தண்­டனை தீர்ப்­ப­ளித்த நீதிமன்றம். ஒரே நாளில், பெண் உற்பட ஐந்து பேருக்கு மரண தண்­டனை தீர்ப்­ப­ளித்த நீதிமன்றம். Reviewed by Madawala News on 6/02/2017 10:03:00 AM Rating: 5