Yahya

கட்டார் vs சவூதி முறுகலும் இலக்கு வைக்கப்படும் ஹமாஸும்.

 
Muja ashraff -

அரசியல், பொருளாதார, ராஜதந்திர விடயங்களில் எதிரியுடன் சேர்ந்தாலும் துரோகியுடன் சேர்ந்து விடக்கூடாதன்பதே சவூதியின் நிலைப்பாடு.

இஸ்லாத்தின் ஆரம்பம் காலம் தொட்டு இன்று வரை கபடத்தனத்துடன் நாடகமாடிவரும் ஷியா போன்ற துரோகிகளை விட அமெரிக்க, இஸ்ரேல் போன்ற எதிரிகள் மேல் என்பதுவே அதன் வாதம்.

அதன் அடிப்படையிலேயே வெளியுறவுக் கொள்கையுனை அமைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது சவுதி. தமது நலன்களுடன் ஒன்றிப்போகாத பிராந்திய நாடுகளுளை கழுத்துறுப்பதொன்றும் புதிதல்ல. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் கட்டாரின் வகிபாகம் முக்கியத்துவம் பெருகின்றது. அரபு வசந்தத்தின் எழுச்சியும் அதனை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய  முகாந்திரங்களை உருவாக்குவதில் இடம்பெற்ற சூழ்ச்சிகளும் இதன் வடிவத்தையே உணர்த்துகின்றன.

எகிப்தில் சகோதரத்துவ அமைப்பு நிலைபெற்று விடக்கூடாதென்பதற்காக முர்சியின் விடயத்தில் தீவிரமாக இயங்கிய அதே அரபுல கூட்டமைப்புதான் தற்போது கட்டாருக்கெதிரான விடயங்களிலும் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கின்றன.

எகிப்தில் சகோதரத்துவ அமைப்பிற்கான கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் அதன் தலைவர்கள் கட்டாரில் முழுமையான சுதந்திரத்துடன் இயங்கத் தொடங்கியதும் முர்சியின் ஆட்சிக் கவிழ்ப்புக்கெதிரான டோஹாவின் ஆதரவும் அல்ஜெஸீராவின் உண்மை படுத்தலும், அல் கொய்தா விடயத்தில் நளினப்போக்கும், ஹமாஸ்  விடயத்தில்  பலஸ்தீனத்துக்கான ஆதரவும் இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகளை மட்டுமல்ல இதுவரை கடைப்பிடித்து வந்த சவூதியின் கொள்ளைக்கெதிரான நிலைப்பாடுகளாகவே தென்பட்டன.

முர்சியின் விடயங்களில் ஸிசியை ஆதரிக்கும் சவூதி பலஸ்தீன் விடயத்தில் ஹமாஸ் ஆதரிப்பதில்லை என்பதும் இஸ்ரேலிய நலன் சார்ந்தவையாக பார்க்கப் படுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே சமீபத்திய வெளிநாட்டமைச்சரின் கூற்றும் அமைந்திருந்தது. டோஹா ஒன்றில் எம்முடனா அன்றி ஹமாஸுடனா என்பதை தீர்மானிக்கட்டும் என்றார்.

அதனோடு இனைந்ததாகவே ஈரானிய விடயங்களையும் பார்க்க வேண்டும் சவூதியின் கிழக்கு பிராந்தியத்தில் ஷியாக்களின் அதிகார மோதல்கள் வலுப்பெற்று வரும்  சூழ்நிலையில் அமெரிக்கவின் மறைமுக ஆதரவுடன் ஈரான் கட்டாரில் நிலைகொள்ள முனைவதும் சவூதியினை மேலும் விழிப்பூட்டவே செய்தன. 

டோஹாவின் ஹமாஸ் மீதான பற்றும் இஹ்வான்களின் செல்வாக்கும், ஈரானின் மறைமுக ஊடுறுவலும் அவற்றின்  நிலைப்பாடுகளில் றியாதின் அதி தீவிரப்போக்கும்தான் கட்டார் தொடர்பான விடயங்களில் கடுமையான முடிவுகளை எடுக்கும் இக்கட்டான சூழ்நிலைக்குள் அதனை தள்ளிவிட்டுள்ளது.

டோஹா மீதான தடையினை இஸ்ரேல் வரவேற்றுள்ளதுடன் அமெரிக்காவோ நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கின்றது மேற்காசிய கொள்கை வகுப்பின் இரு பெரும் காரணிகளான இஸ்ரேலின் இருப்பும் எண்ணை வளம் மீதான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்ட பின் தனது கொள்கை வகுப்பினை மீற்பரிசீலனை செய்கின்றதா என்ற ஜயங்களும் எழாமலில்லை.

எது எவ்வாறாயினும் ஹமாஸ், ஈரான், லிபியா ,துருக்கி, இஹ்வான்கள், தொடர்பான  விடயங்களில் முறன்பாடுகளுக்கான தோற்றப்பாடுகள் கானப்படினும் அல்லது ஊடகங்களால் வாயிலாக ஏற்படுத்த முனைவினும் அநேகமாக விடயங்களில் ஒருமித்த கோட்டிலேயே இவை இரண்டும் பயணிக்கின்றன.

பிராந்திய நாடுகளின் கூட்டுறவுகள் இல்லாமல் கட்டாரால் தனித்து பயனிப்பதன்பது சாத்தியமற்றது அதன் பூகோள ரீதியான அமைவிடம் அதனையே சுட்டி நிற்கின்றது அதையும் மீறிய ஓர்  முடிவை நோக்கிய நகர்வுப் பாதையில் அது செல்ல முனையுமாயின்அது அரசியல், பொருளாதார ராஜதந்திர ரீதியான தற்கொலைக்கு நிகராகவே பார்க்கப்படும்.

அதனடிப்படையில் இப்பிரச்சினையை நோக்கும் போது சவூதி தலைமையிலான கூட்டணி நாடுகளின் உறவுகளில் துண்டிப்பதை விடுத்து ஹமாஸ் மற்றும் இஹ்வானிய விடயங்களில் சற்று தளம்பல் நிலையிலான போக்கை கையாள முயல்வதானது பிராந்திய ரீதியான சமநிலையை ஏதுவாக்க முயலும்.

அவை அரசியல், ராஜதந்திர பொருளாதார, ரீதியிலான அனுகூலம் தரக்கூடிய முடிவாக இருக்கும்.
கட்டார் vs சவூதி முறுகலும் இலக்கு வைக்கப்படும் ஹமாஸும். கட்டார் vs சவூதி முறுகலும் இலக்கு வைக்கப்படும் ஹமாஸும். Reviewed by Madawala News on 6/07/2017 09:17:00 AM Rating: 5