Ad Space avaiable

பிரசவித்த சிசுவை, வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு தாய் தப்பி ஓட்டம்.


தான் பிரசவித்த சிசுவை, வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு, பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று, நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க, குரணை பிரதேசத்தில்  வசிக்கும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் எஸ்.பி. குமுதுனி (வயது  39) என்ற பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்து,  அதனை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி, வைத்தியசாலையின் 10ஆம் இலக்க வார்டில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் அன்றைய தினம் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

இவ்வாறு குழந்​தையை பிரசவித்த பெண், கடந்த 2ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது குழந்தையை வார்ட்டில் உள்ள கட்டிலில் வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

பிரசவித்த சிசுவை, வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு தாய் தப்பி ஓட்டம். பிரசவித்த சிசுவை, வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு தாய் தப்பி ஓட்டம். Reviewed by Madawala News on 6/06/2017 04:44:00 PM Rating: 5