Ad Space Available here

யூத சதியா கட்டார்- சவூதி முறுகல்?


நேற்று சவூதி உற்பட 5 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் சேர்ந்து கட்டாருடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக அதிகார பூர்வமாக அறிவித்தன.

இதனையடுத்து இது தொடர்பான விவாதங்கள் இது யூதர்கள் (இஸ்ரேலிய) சதியாகும் .கட்டாரை தனிமைப்படுத்தி கட்டாரை கூறு போட பார்க்கிறார்கள் என்றும் சவூதியே இதற்கான காரணம் என்றும் சில விபரம் அறியாத உள்நாட்டு மேதாவிகள் கூறுவதால் இது என்னமோ யூத செயல் என்று மூடிமறைக்க நினைக்கிறார்கள்.

முதலில் சவூதி -கட்டாருகிடையேயான முறுகல்கள் புதிதாக இன்று முளைக்கவில்லை 7 வருடத்துக்கும் மேற்பட்ட கதை அது.எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் இஹ்வான்கள் என்ற அமைப்பை வெளிப்படையாக கட்டார் ஆதரித்தபோது.

அது மட்டமல்ல இஹ்வானிய அறிஞர் யூஸுப் அல் கர்லாவியை தன் நாட்டில் வைத்து உயர் மட்ட மார்க்க அறிஞராக கட்டார் இதுவரை எடுத்துக் கொண்டுள்ளது.யார் இந்த யூஸுப் கர்லாவி என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை.ஆனாலும் பல வழிகேடான கொள்கையில் இருப்பவர் என்பதை மட்டும் நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.இதனால் ஏற்கனவே அரபு நாடுகளுக்குல் மத்தியில் குழப்பம் எழுந்து பல அரபு நாடுகள் தூதர்களை கட்டாரில் இருந்து திரும்ப எடுத்துக் கொண்டது.பின்பு 7 மாதங்கள் கழித்து இஹ்வானிய அறிஞர்களை வெளியேற்றி விட்டதாக கூறவும் மீண்டும் தனது தூதுவர்களை கட்டாரை நோக்கி அனுப்பியது.

இதை தொடர்ந்து ஷிஆக்களுடனும் (ஈரானுடனும)் கட்டார் அரசு உறவைப் பேனியது.உண்மையில் சவூதி மேல் ஒரு பலமான உறவை கட்டார் பேனி வரவேண்டும் என்று கட்டார் நினைத்திருந்தால் சவூதிக்கு முழுக்க முழுக்க எதிரியான ஷிஆக்களையும் (ஈரானையும்) இஹ்வான்களையும் ஆதரித்திருக்காது.ஆனாலும் கட்டார் இதைப் பற்றி கவலை கொண்டதாக தெறியவில்லை.ஷிஆ மற்றும் இஹ்வான்களுடன் உறவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டே சென்றது.எனவேதான் கட்டாரில் "முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்' என்று பெயர் சூட்டப்பட்ட பள்ளி வாயலுக்கு அதை கட்டார் சூட்டுவதற்கு தகுதியில்லை என்றும் .கட்டார் ஸலப்களுடைய கொள்கையை விட்டும் தடம் புறண்டு இஹ்வான்களின் சிந்தனைகளுக்கு சென்று விட்டது யூஸுப் அல் கர்லாவியையும் முன் வைத்து அவர்களது அறிவித்தல் அமைந்தது.

இந்த பிரட்சினைக்கு அன்மையில் ட்ரம்ஸ் சவூதி வந்து போனதும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டி சவூதி அமேரிக்க அடிமையாக மாரிவிட்டது என்று அடுத்த கட்டுக்கதைகள் பரப்பி வருகின்றனர்.இவர்களுக்கு தெறியாமல் போனது " மத்திய கிழக்கின் மிகப் பெரிய அமேரிக்க ரானுவ மையம்" கட்டாரில் உள்ளது என்று.எனவே இவர்கள் புனைய நினைக்கும் கதை தெளிவானதே.

இஸ்ரேல் இந்த பிரிவினைக்கு ஆதரவு தெறிவிப்பதை முன் நிருத்தி பாருங்கள் தெளிவாக யூதனுடைய செயல்தான் இது என்று தெறிகிறது என்றவாறு இந்த பிரிவினைக்கு தொடர்பை கொண்டு வருகிறார்கள்.அரபு வசந்தம் உறபட பல இஸ்லாமிய நாடுகள் முன்மைக்கும் திட்டங்களுக்கு எதிராக செயற்படும் நாடு கட்டார்.ஆனால் கட்டார் செய்யும் ஒரு நல்ல செயல் என்னவோ- பலஸ்த்தீனை ஆதரிப்பது அதுவும் பலஸ்த்தீனர்கள் இஹ்வானிய சிந்தனையாளார்கள் என்பதாலோ என்னவோ.ஆனாலும் பலஸ்த்தீனி மீட்டெடுப்போம் என்றும் சவூதி மன்னார் சல்மான் சூளுரை விடுத்ததையும் இது வரை பலஸ்த்தீனர்கள் உற்பட சிரிய யமன் மக்களுக்கு தனது உதவியையும் நிறுத்தாமல் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதையும் மறந்து பேசுகிறார்கள். இந்த உதவியை சவூதி வெளிக் காட்டிக் கொள்வதில்லை.ஏனன்றால் அவர்களது கொள்கை இது இறைவனுக்காக செய்யும் செயல் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதாகும்.அன்மையில் சிரியாவின் 10 லட்சம் மக்களுக்களையும் மியன்மார் யமன் போன்ற நாடுகளின் பிரஜைகளையும் யாருக்கும் சொல்லாமல் சவூதி முகீம்களாக பொருப்பேற்று கொண்டது.இது தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் சவுதியின் இவ்வாறான செயலை புறிந்து கொள்ளாமல் சவூதிக்கு எதிராக விமர்சிக்கும் ஊடகங்களை பார்த்து தனது கவலைகளை தெறிவித்த போதே பலருக்கும் சவூதியின் இப்படியான செயல் தெறியவந்தது.எனவே அது போன்றுதான் பலஸ்த்தினை இஹ்வான்கள் வெளிப்படையாக ஆதரித்து ஸலப்கள்ஆட்சி அதற்கு எதிரானவர்கள் என்று சித்தரிக்க முனைகிறார்கள்.சவூதியை பொருத்த வரை "எதிரியின் பலத்தை பலத்தாலே அடிக்க வேண்டும்" என்ற கொள்கையில் இருப்பது.எனவேதான இஸ்ரேலுடைய விடயத்தில் அமைதி காண்கிறது.பலஸ்தீனை காப்பதற்கு முதல் தனது நாட்டுக்கு ஷிஆக்கள் மற்றும் இஹ்வான்களால் வரும் அச்சுருத்தலை சமாலிக்கவே நேரம் போதவில்லை.தன் நாட்டையே காக்க போராடும் சவூதி பலஸ்த்தீனுக்காக போராடவில்லையே என்று கோபப் படுவதில் என்ன நியாயம்?

கட்டாரை அமேரிக்க ரானுவம் முழுதாக பாதுகாக்கிறது.ஷிஆக்களையும் இஹ்வான்களையும் கூடவே உறவாடலுடன் வைத்திருப்பதனால் அதற்கு இவர்களால் எந்த பிரட்சினையும் வந்து விட போவதில்லை.பலஸ்தீனை ஆதரிப்பதிலும் பிரட்சினை ஏற்பட போவதில்லை.எனவேதான் இஸ்ரேலுக்கு பெரும் தலையிடியாக கட்டார் விளங்கியது .தன் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் கட்டாரை எதிர்த்த நாடுகளையும் இஸ்ரேல் பாராட்டியது அவர்கள் பாராட்டியதால் இஸ்ரேலின் கூட்டாளிகலாக அந்த நாடுகள் மாறிவிடுமா?
இதுவரை யூதர்கள் புக முடியாத கோட்டையாக சவூதி விளங்குகிறது.இஸ்ரேலுக்கான தூதுவரை நியமித்தற்காக இஹ்வானிய ஆட்சியாளரான முர்ஸியை எதிர்த்த நாடு சவூதி என்பதை மறந்து விட முடியாது.

சவூதி அரேபிய மன்னர் ஆட்சியை விமர்சிக்கும் இஹ்வான்கள் கட்டார் மன்னராட்சியை ஆதரிப்பது வெட்கமாக தெறியவில்லை போலும் இவர்களுக்கு.சவூதி மன்னராட்சியாக இருக்கும் வரையிலேயே சவூதி சவூதியாக இருக்கும் என்றும் ஜனநாயக ஆட்சி வேண்டி நின்றால் யூதர்கள் உலக நல்லினக்கம் ,அபிவிருத்தி, மனிதாபிமான செயல் என்ற பெயரில் பல நாடுகளுக்கும் ஜனநாயக ரீதியாக அந்த நாட்டுக்குல் நுளைந்து அந்த நாட்டை நாசமாக்கி விடுவதை போன்று சவூதிக்குல்லும் ஜனநாயக ஆட்சி வந்தால் இலகுவாக வந்து விடுவார்கள்.எனவேதான் மன்னராட்சி இருக்கும் வரை மட்டுமே அரபு நாடுகள் பாதுகாக்கப் படும் இல்லை என்றால் இன்றைய  பலஸ்தீன ,சிரியா , எகிப்திய நாடுகளின் நிலைதான் சவூதிக்கும்.

தன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் செய்து கொடுத்து மக்கா மதீனாவை நினைத்தும் பார்க்காத அளவு அழகாக நிர்வாகம் செய்து கொண்டு வரும் சவூதிய மன்னராட்சிக்கு எதிராக இந்த இஹ்வான்களும் ஷிஆக்களும் பொங்குவது ஏனோ? ஜனநாயகம் என்ற பெயரில் மேற்கத்தேயே கலாச்சாரத்தை உற்புகுத்தி , இஸ்லாமிய ஆட்சியை தான் நினைத்தது போல் சட்டம் ஏற்றி யூதர்களுடன் கைகுழுக்கி வாழ்வதை எதிர்பார்த்துத்தானே சவூதிய மன்னராட்சிக்கு எதிராக இவ்வளவு கொதிப்பும்.எனவேதான் இஹ்வான்களும் ஷிஆக்களும் சவூதிக்கு எதிராக இந்த பிரட்சினையை யூத சதிவரை திரித்து விட முனைகிறார்கள்.

இன்னும் கொஞ்சம் தெளிவு பெறுவது என்றால் அமீரகத்தில் இருந்து ஒரு மெயில் ஹெக் செய்யப்பட்டதாகவும் அதை கட்டார் தான் செய்தது அதில் உள்ள விடயங்களையும் கட்டார்தான் வெளியிட்டது என்றும் சவூதி நம்புவதாலும் அந்த செய்தியில் துருக்கிய உர்துகானுக்கு எதிரான ரானுவ புரட்சி மற்றும் ஹமாஸ் எதிர்ப்பு மற்றும் எகிப்து இஹ்வான்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்த அரபு நாடுகள் சேர்ந்து சதி செய்ததாகவும் இது பற்றி இஸ்ரேலிய உரையாடலையும் அந்த மெயிலில் இருப்பதாகவும் இதை வெளிப்படுத்தியத்தாலேயே கட்டாருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் அடுத்த கட்டுக்கதை பரப்புகின்றனர்.நீங்கள் நான்றாக அவதானித்தால் இஸ்லாமிய நாடுகள் சதி செய்ததாக கூறப்படும் அந்த மூன்று செயலுமே இஹ்வான்கள் தொடர்பானது மட்டுமே. அதிலிருந்து தெளிவாக ஒன்றை பிறிந்து கொள்ள முடிகிறது இந்த பிரச்சினை முடிந்த அளவு தனக்கு ஆதரவாகவும் அரபு நாடுகள் யூத தொடர்பை வைத்திருக்கிறது என்பதையும் மக்கள் மனதில் பதிய வைக்க நினைக்கிறார்கள் இந்த இஹ்வான்கள்.ஆனால் துருக்கிய இராநுவ புரட்சியின் போது எர்த்துக்கான் சவுதியிடம் தாம் ஓடி வந்தார் என்று இந்த இஹ்வான்கள் மறைத்து மலுப்ப பார்க்கிறார்கள்.

ஆனால் நாம் தெறிந்து கொள்ள வேண்டியது இது கொள்கை சார்ந்த அண்ணன் தம்பி பிரட்சினை.கட்டார் இஹ்வானிய ஷிஆக்களுடனான உறவை நிருத்திக் கொண்டார்களேயானால். ஐஎஸ் ஐஎஸ் ற்கு ஆதர்வு கொடுப்பதையும் நிறுத்திக் கொள்வார்களேயானால் சவூதி மீண்டும் கட்டாருடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளும்.

இஸ்லாமிய எதிரிகள் எம்மை எதிக்கும் போது சவூதிக்கு ஓடு என்றுதான் கூறுகிறார்களே தவிர கட்டார் டுபாயிற்கு ஓடு என்று சொல்வதில்லை.காரணம் இஸ்லாமியர்களின் தலைமைத்துவம் அறிந்தோ அறியாமலோ சவூதியிடம் இருக்கிறது.எமக்கு ஒரு பிரட்சினை என்றால் தூக்கி கொண்டு ஓடுவதும் அங்கேதான்.ஏனன்றால் சவூதி ஒரு அறிவித்தால் விடுத்தால் ஏனைய அரபு நாடுகளும் அதை முன்மொழியும்.ஆதலால்தான் சவூதி என்றால் காபிரான ஆட்சியாளர்களுக்கும் ஒரு எரிச்சல்.

கட்டார் வாழ் வெளிநாட்டு மக்களை சவூதி நினைத்துப் பார்க்கவில்லை என்று பலர் கவலைப்பட்டு சவூதிக்கு எதிராக பேசுகிறார்கள்.ஆனால் கட்டார் கூறியத் என்னவோ இதனால் எங்கள் உள் விவகாரங்கள் பாதிக்கப்பட போவதில்லை என்பதுதான்.எனவே பின் விளைவை யோசித்துப் பார்த்தும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது கட்டார்தானே தவிர ஏனைய நாடுகள் அல்ல.உண்மையில் இவர்கள் கோப படுவதன்றால் கட்டாருக்கு எதிராகத்தான் கோபப்பட்டாக வேண்டும்.தங்கள் நிலையை புறியாமல் கட்டார் பிடிவாதம் பிடிப்பது மட்டுமனறி இது திடீர் முடிவு அல்ல.ஏற்கனவே தரை மார்க்க வழியை தடை செய்து எச்சரித்தது சவூதி பின்பு வெளிப்படையாக எச்சரித்தது.ஆனாலும் கட்டார் அதை பொருட்படுத்தவும் இல்லை.இதனால் தனது நாட்டுக்கு எந்த தீங்கும் இல்லை என்றே யோசித்தது.

ஒரு வேலை சவூதி மன்னர் (சுஊத்) பரம்பரை இஹ்வான்கள் சொல்வது போன்று சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் கூட்டமாகவே இருந்தாலும் கூட அவர்கள் மக்கா மதீனா விடயத்திலும் ஏனைய இஸ்லாமியர்கள் விடயத்திலும் அவர்கள் பொருப்பை கட்சிதமாக பொருப்பறிந்து செய்து கொண்டுதான் வருகிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.தன்நாட்டு மக்களுக்கு தேவையானதை குறையின்றி பாதுகாக்கும் சவூதி மன்னராட்சியை எதிர்ப்பதில் என்ன சுகத்தை இவர்கள் காண போகிறார்கள்.

மக்கா மதீனாவை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருக்கும் சவூதி தன்னுடைய பாதுகாப்புக்காக கட்டாருடம் முரண்பட்ட இந்த செயலை எவ்வாறு குறை காண்பது?

மதீனா வாசிகளுக்கு எதிராக யார் சூழ்ச்சி செய்தாலும் அவர்கள் நீரில் உப்பு கரைவது போன்று கரைந்து காணாமல் போய் விடுவார்கள்.

(புஹாரி)

இன்றைய சூழ்நிலை. By S.sifraj

யூத சதியா கட்டார்- சவூதி முறுகல்? யூத சதியா கட்டார்- சவூதி முறுகல்? Reviewed by Madawala News on 6/06/2017 02:42:00 PM Rating: 5