tg travels

இன்று ஒன்றுமே எரியவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியமாக பார்க்கின்ற அளவிற்கு நிலைமை சென்றுள்ளது.


காலம் கடந்து கொண்டிருக்கிறது எமது சொத்துக்களும் ஒவ்வொன்றாக தீக்கிரையாக்கப்படுகின்றன. இன்று ஒன்றுமே எரியவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியமாக பார்க்கின்ற அளவிற்கு அச் செய்திகள் ஒவ்வொன்றும் எமக்கு சாதாரனமான ஒன்றாகிவிட்டன/ சாதாரனமான ஒன்றாக்கப்படுகின்றன.

இனியும் குனூத் ஓதிக் கொண்டும், அரசியல்வாதிகளுக்கு ஏசிக் கொண்டும் வீடுகளில் முடங்கிக் கொண்டிருந்தால் நாம் விழிக்கும் முன் இன்னும் பலவற்றை இழந்து விடுவோம். இவை எல்லாம் சிங்கள காடையர்களால் ஆக்ரோசத்தில் நடாத்தப்படுகின்ற சம்பவங்களல்ல. மிகத் துல்லியமான ஒரு திட்டமிடலுடன் நகர்த்தப்படுகின்ற காய் நகர்த்தல்கள்.

இனியாவது எமது சொத்துக்களை நாமே பாதுகாப்பதற்கான திட்டங்களை நாம் ஆராய்ந்திட வேண்டும். குறிப்பிட்ட குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள எல்லா முஸ்லிம் வர்த்தகர்களும் ஒன்றினைந்து இவற்றினை நடைமுறைப்படுத்தினாலே அன்றி இவ் வக்கற்ற அரசாங்கத்தினையும், அடியாள் பொலிஸினையும் நம்பி நாம் எமது சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது.

இவையொன்றும் நமக்கு புதிதான ஒன்றுமல்ல. பயங்கரவாதம் தலை விரித்தாடிய நேரத்திலும், இனப் பிரச்சனைகளின் போதும் எமது பள்ளிவாயல்களையும், கடைகளையும், எமது ஊரையும் நாம் இவ்வாறுதான் பாதுகாத்து வந்துள்ளோம். இது மேற்கிலும், தெற்கிலும் வாழும் முஸ்லிம்களை விட வட கிழக்கு முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்று.

30 வருடங்களுக்கு முன் நாம் எவ்வாறான ஒரு சூழலில் இருந்தோமோ, எவ்வாறு எமது சொத்துக்கள் சூரையாடப்பட்டதோ, எவ்வாறு எமது வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டனவோ அந்நிலையில்தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதை நடத்துகின்ற கும்பலும், நடைபெறும் இடமும் மட்டும்தான் மாறிப் போயிருக்கின்றன.

அப்போதெல்லாம் நாம் ஒன்றுபட்டிருந்தோம். அப்போதெல்லாம் எம் இளைஞர்கள் தெளிவோடிந்தார்கள். எமது சமூகம் விழித்துக் கொண்டது. இன்று நாம் அரசியலாலும், இயக்கங்களினாலும், ஏன் விளையாட்டினாலும் கூட பல கூட்டங்களாக சிதறிவிட்டோம். இன்று எமது இளைஞர்கள்  மாய வலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கின்றார்கள். எமது சமூகம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது.

-ஷியான் யாக்கூப்-
இன்று ஒன்றுமே எரியவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியமாக பார்க்கின்ற அளவிற்கு நிலைமை சென்றுள்ளது. இன்று ஒன்றுமே எரியவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியமாக பார்க்கின்ற அளவிற்கு நிலைமை  சென்றுள்ளது. Reviewed by Madawala News on 6/10/2017 11:35:00 AM Rating: 5