tg travels

சீனப்பெண்ணின் 1 கோடி 54 இலட்சம் பணத்தை திருடிய இருவர் சிக்கினர். ( ஒருவர் காவல்துறை)


வௌ்ளவத்தைப் பகுதியில் சீனநாட்டு பெண் ஒருவரிடமிருந்து 1 கோடி 54 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தப் பெண் நேற்று (11) கோட்டையிலிருந்து வௌ்ளவத்தை நோக்கிச் செல்லும் போதே, இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் பணிபுரிவதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சீனப்பெண்ணின் 1 கோடி 54 இலட்சம் பணத்தை திருடிய இருவர் சிக்கினர். ( ஒருவர் காவல்துறை) சீனப்பெண்ணின் 1 கோடி 54 இலட்சம் பணத்தை திருடிய இருவர் சிக்கினர். ( ஒருவர் காவல்துறை) Reviewed by Madawala News on 7/12/2017 03:05:00 PM Rating: 5