Ad Space avaiable

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது ! சென்னையில் 11 பேருக்கு வலைவீச்சு..


ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பணம் திரட்டி உதவியதாக சென்னையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இவரை தொடர்ந்து சென்னையில் மேலும் 11 பேரை கைது செய்ய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய  உளவுத்துறை மற்றும் ராஜஸ்தான் தீவிரவாத  தடுப்பு பிரிவு போலீசார் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். ஐஎஸ்ஐஎஸ்  பயங்கரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்கள் மற்றும் நிதி திரட்டி வருவதாக  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

பின்னர் உள்துறை  அமைச்சகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாநிலத்திலும் வெளிநாட்டு  பணபரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது.  

அப்போது  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜமீல் முகமது என்பவருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத  அமைப்புடன் நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, ராஜஸ்தான்  தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜமீல்  முகமதுவை கைது செய்தனர். 

அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நபர்கள்  மற்றும் ஜமீல் முகமது வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்போது நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் ரூபாய் பணம் ஜமீல் முகமது  வங்கி கணக்கில் வரவு வைத்தது தெரியவந்தது.
அதில் தமிழகத்தில்  இருந்தும் பல லட்சம் ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது தெரியவந்தது.  

இதுகுறித்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வந்தனர். அப்போது சென்னை மயிலாப்பூர் பஜார் வீதி அடுக்குமாடி  குடியிருப்பை சேர்ந்த முஸ்தபா மற்றும் இவரது மகன் முகமது இக்பால்(32)  ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு போலீசார் கைது  செய்தனர்.



-தினகரன்-


ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது ! சென்னையில் 11 பேருக்கு வலைவீச்சு.. ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய மேலும் ஒருவர் கைது ! சென்னையில் 11 பேருக்கு வலைவீச்சு.. Reviewed by Madawala News on 7/10/2017 02:17:00 AM Rating: 5