Kidny

Kidny

14 மில்லியனை 'குதத்தில்' மறைத்து எடுத்து செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் சிக்கிய சம்பவம்.


இலங்கையிலிருந்து 14 மில்லியன் ரூபா பெறுமதியான வெளி நாட்டு கரன்ஸிகளை குத வழியில் பதுக்கி சிங்கப்பூருக்கு கடத்த முயற்சித்த இலங்கைப் பிரஜையை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த 54 வயதான தச்சுத் தொழிலாளியொ ருவரே இவ்வாறு கையும் மெய் யுமாக கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப் பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

மேற்படி நபர் நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் ஜெட் எயார்வேய்ஸ்க்கு சொந்தமான 9W0251 என்ற இலக்க விமானம் மூலம் மும்பைக்கூடாக சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வ தேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் சுங்க அதிகாரி களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த இரகசியத் தகவல்களுக்கமைய இந்நபர் சோதனையிடப்பட்டார்.

எனினும் சோதனையின்போது அவரிடமிருந்து சந்தேகத்துக்கிடமான எவ்விதப் பொருட்களும் கிடைக் கவில்லை. என்ற போதும் சுங்க அதிகாரிகள் அவரைத் தொடர்ந் தும் சோதனை செய்வதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர். அப்போது அவர் எக்ஸ் ரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதில் அவரது குத வழியாக பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவர் தன்னிடம் வெளிநாட்டு நாணயத் தாள்கள் இருப்பதனை ஒப்புக் கொண்டார்.

அவற்றை வெளியே எடுத்து தர முடியுமா? என சுங்க அதிகாரிகள் கேட்டதற்கு அவர் உடனடியாக இணங்கியதுடன் எவ்வித கடினமும் இன்றி மிகவும் பரீட்சயமானவர் போல் இலகுவாக அவற்றை வெளி யேற்றித் தந்துள்ளார். இரண்டு ஆணுறைகளில் மிகவும் நுட்பமான முறையில் சுருட்டி அடுக்கி வைக்கப்பட்ட வெளிநாட் டுக் கரன்ஸிகள் சந்தேக நபரின் குத வழியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்றும் இவ்விசாரணைகளை முன்னெடுத்த பணிப்பாளர் பஸ்நா யக்க பராக்கிரம தெரிவித்தார்.

14 மில்லியனை 'குதத்தில்' மறைத்து எடுத்து செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில் சிக்கிய சம்பவம்.  14 மில்லியனை  'குதத்தில்' மறைத்து எடுத்து செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்கவில்  சிக்கிய சம்பவம். Reviewed by Madawala News on 7/29/2017 11:47:00 AM Rating: 5