Ad Space avaiable

பொலிஸ் மா அதிபருக்கு விருது ! 


2017 ம் வருடத்திற்கான சிறந்த தொழில் வழங்குனர் - வாழ்நாள் சாதனையாளர் விருது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு வழங்கப்பட்டது.


உலக மனிதவள மேம்பாட்டு மாநாடு மனிதவள துறைகளில் முன்மாதிரியாக உள்ள இலங்கையிலுள்ள உயர்மட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கும் விழாவை கொழும்பு தாஜ் சமூத்திரா ஹோட்டலில் நடத்தியது.


மூலோபாய மனித வள முகாமைத்துவம் (HRM), பயிற்சி மற்றும் அபிவிருத்தி, கற்றல், பயிற்சியளிப்பு, தலைமைத்துவம், நிறுவன அபிவிருத்தி, வடிவமைப்பு சிந்தனை மற்றும் மனித வள முகாம் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளையும் உள்ளடக்கிய உலகளாவிய நிகழ்வாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலக மனிதவள காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொலிஸ் மா அதிபருக்கு விருது !  பொலிஸ் மா அதிபருக்கு விருது !  Reviewed by Madawala News on 7/13/2017 10:47:00 PM Rating: 5