tg travels

2018 - 2020 கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள்.


2018ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான மைக்ரோ நிதிக்கட்டமைப்புக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சால்  தயாரிக்கப்படுகின்ற ‘2018-2020 மத்திய கால மைக்ரோ நிதிக்கட்டமைப்பானது’ பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டமைகின்றது. இதன் அடிப்படையில் 2020ம் ஆண்டளவில் பின்வரும் இலக்குகளை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர முன்வைக்கப்பட்ட அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதன்பிரகாரம்,

 1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் வருவாயை 16.5% ஆக உயர்த்துதல்.

 2. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் மீள் செலவை (Recurrent expenditure) 14.8% க்கு கொண்டுவரல்.

 3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது மக்கள் முதலீடு 5.3 % ஆக இருக்கும்.

 4. வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 % ஆகக் குறைத்தல்.

 5. நாட்டின் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 %க்கு குறைத்தல்.

அதனடிப்படையில், 2018-2020 மத்திய கால மெக்ரோ நிதிக்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அரசாங்கத்தின் முக்கியத்துவமான வேலைத்திட்டங்களைக் கவனத்திற் கொண்டு, 2018 ஆம் ஆண்டில் நேர்முக அமைச்சுக்களுக்கு வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டை மட்டுப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 - 2020 கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள். 2018 - 2020  கால பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள். Reviewed by Madawala News on 7/06/2017 06:55:00 AM Rating: 5