Ad Space Available here

2020 ல் கொழும்பில் வெள்ளத்தை முற்றாக கட்டுப்படுத்த வேலைதிட்டம் முன்னெடுப்பு..


2020ல் கொழும்பு நகரப் பகுதிகளில் வெள்ளத்தை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருவகின்றது.


இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் சுரங்கப் பாதை ஊடாக நீர் வழிந்தோடக்கூடியதற்கான கட்டமைப்பொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,


எதிர்வரும் சில மாதங்களில் வேரஸ்கங்க மற்றும் களு ஓயா அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும். இதற்காக உலக வங்கியின் நிதியுதவி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.


மேலும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் அமைச்சர்பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


2020 ல் கொழும்பில் வெள்ளத்தை முற்றாக கட்டுப்படுத்த வேலைதிட்டம் முன்னெடுப்பு.. 2020 ல் கொழும்பில் வெள்ளத்தை முற்றாக கட்டுப்படுத்த வேலைதிட்டம் முன்னெடுப்பு.. Reviewed by Madawala News on 7/09/2017 09:28:00 PM Rating: 5