Ad Space avaiable

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல்  ஒட்டோபர் 2 இல் : விரைவில் வர்த்தமானி அறிவித்தல் ..


வடமத்திய , சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த மூன்று மாகாண சபைகளிலும் காலப்பகுதி அக்டோபர் 1 ம் திகதிக்கு நிறைவடைகிறது.அதன்படி,அச்சபைக்கான தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. 


அரசியலமைப்பின் 154 வது பிரிவு திருத்தம் கெண்டுவருதால் மட்டுமே வரவிருக்கும் மாகாண சபை தேர்தலை தள்ளிவைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


ஒரு மாகாண சபையின் முதல் கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதியில் இருந்து ஐந்து வருடங்களுக்கு அதன் காலம் நீடிக்கும், அதனை தொடர்ந்து அதனை நீடிக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே திருத்த முடியாது. 


தேர்தல் மக்கள் உரிமையுடன் தொடர்புடைய விஷயம். எனவே,சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஒப்புதல் தேவை என்று ஆணையம் நம்புவதாகவும் இது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும்,என மஹின்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.



மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல்  ஒட்டோபர் 2 இல் : விரைவில் வர்த்தமானி அறிவித்தல் .. மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல்  ஒட்டோபர் 2 இல் : விரைவில் வர்த்தமானி அறிவித்தல் .. Reviewed by Madawala News on 7/03/2017 02:11:00 AM Rating: 5