Ad Space avaiable

மீதொட்டமுல்ல குப்பைமேடு  உயிரிழந்தவர்களுக்கு 3.2 கோடி ரூபா இழப்பீடு ..


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததன் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் மற்றுமொரு கட்டம் கொலன்னாவை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. 


கடந்த ஏப்ரல் 14ம் திகதி இடம்பெற்ற இந்த குப்பை மேடு சரிவு காரணமாக 32 பேர் உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கொலன்னாவை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எஸ் எம் மரிக்கார் அவர்களின் முயற்சியால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் அவரது உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த அனர்தத்தில் பலியான 32 பேரின் குடும்பங்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டது. 


மீதொட்டமுல்ல குப்பைமேடு  உயிரிழந்தவர்களுக்கு 3.2 கோடி ரூபா இழப்பீடு .. மீதொட்டமுல்ல குப்பைமேடு  உயிரிழந்தவர்களுக்கு 3.2 கோடி ரூபா இழப்பீடு .. Reviewed by Madawala News on 7/12/2017 11:56:00 AM Rating: 5