Ad Space avaiable

புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டுக்கு சென்ற விரிவுரையாளர்கள் 38 பேர் எஸ்கேப்.


புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டுக்குச் சென்றிருந்த, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 38 பேர், காணாமல்போய்விட்டனர் என்று பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கின்றது.

இவ்வாறு காணாமற் போனவர்களில், கூடுதலானோர், உதவி விரிவுரையாளர்கள் என்றும் அறியமுடிகின்றது.

பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும், விசேட கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, வெளிநாட்டில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு காணாமற்போயுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

இவ்வாறு காணாமற்போனவர்கள், பல்கலைக்கழகத்துடன், கடன்பத்திர ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளனர். இதனால், பல்கலைக்கழகத்துக்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் நட்டமும் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த விரிவுரையாளர்களுக்கும் அவர்களின் பிணையாளர்களுக்கம் பல்கலைக்கழகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அவ்வப்போது, வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பிவை க்கப்பட்டுள்ளதாகவும். சில கடிதங்களுக்கு இன்னுமே, பதில்கள் கிடைக்கவில்லையென்றும் அந்த தகவல் தெரிவித்தது.

இன்னும் சிலர், வேண்டுகோள் கடிதங்களை, திருப்பியனுப்பும் கடிதத்தின் ஊடாக, பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வசந்த பெரேரா தெரிவிக்கையில், 'காணாமற்போனவர்களாக கருதப்படும் மேற்குறிப்பிட்ட நபர்களை கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கமுடியுமா என்பது தொடர்பில், சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும்' அவர் தெரிவித்தார்a.

'இதேவேளை, அவர்கள் காணாமற்போய்விட்டதாக கண்டுகொண்டதன் பின்னர், அவர்களுக்கான கொடுப்பனவுகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் இதன்போது' குறிப்பிட்டார்.
புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டுக்கு சென்ற விரிவுரையாளர்கள் 38 பேர் எஸ்கேப். புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டுக்கு சென்ற விரிவுரையாளர்கள் 38 பேர் எஸ்கேப். Reviewed by Madawala News on 7/20/2017 12:03:00 PM Rating: 5