tg travels

கவர்ச்சியானது என கூறி, பெண்ணின் ஆடைகளை கிழித்து அவமதித்த 3 பேருக்கு மரண தண்டனை .

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 2014-ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இளம்பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்தபோது அவர் அருகில் 3 வாலிபர்கள் சென்றுள்ளனர்.


‘உன்னுடைய ஆடை மிகவும் கவர்ச்சியாக உள்ளது. இதுபோன்ற ஆடைகளை உடுத்தினால் ஆண்களுக்கு கற்பழிக்க தான் தோன்றும்’ எனக் கூறிவிட்டு பெண்ணை வார்த்தைகளால் சித்ரவதை செய்துள்ளனர்.


பின்னர், பெண்ணின் ஆடைகளை கிழித்து அவமதித்துள்ளனர். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு நாடு முழுவதும் பெண்களின் உரிமைகளுக்காக போராட்டங்கள் நடைபெற்றது.


’என் ஆடை, என் விருப்பம்’ என கோஷமிட்ட பெண்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.


மேலும், பெண்களின் அடிப்படை உரிமைகளை காக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இச்சம்பவங்களை தொடர்ந்து 3 வாலிபர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இவர்கள் மீதான வழக்கின் இறுதி விசாரணை நேற்று நைரோபி நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.


அப்போது, ‘பெண்ணின் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் அவருடைய ஆடையை கிழித்து அவமதித்த 3 வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதாக’ கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.


கென்யா நாட்டில் பெண்ணின் ஆடைகளை கிழித்த குற்றத்திற்காக 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

எனினும், கென்யாவில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஒரு கைதிக்கு கூட மரண தண்டனை நிறைவேற்றவில்லை.


கென்யா ஜனாதிபதியான உக்ரு கென்யட்டா என்பவர் கடந்தாண்டு அனைத்து கைதிகளின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியானது என கூறி, பெண்ணின் ஆடைகளை கிழித்து அவமதித்த 3 பேருக்கு மரண தண்டனை . கவர்ச்சியானது என கூறி, பெண்ணின் ஆடைகளை கிழித்து அவமதித்த 3 பேருக்கு மரண தண்டனை . Reviewed by Madawala News on 7/21/2017 04:33:00 PM Rating: 5