Kidny

Kidny

4 வயது சிறுவன் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு.


மின்னேரிய பொலிஸ் பிரிவின் மஹரத்மலை பகுதியில் தாக்குதலுக்குள்ளான 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

தாக்குதலுக்கு இலக்கான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று மாலை பலியாகியுள்ளார். 

சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. 

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் சிறிய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

எதுஎவ்வாறு இருப்பினும், சிறுவனின் மரணம் தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வௌியாகவில்லை. 

இது பற்றிய மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
4 வயது சிறுவன் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு. 4 வயது சிறுவன் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு. Reviewed by Madawala News on 7/05/2017 01:36:00 PM Rating: 5