Ad Space avaiable

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தொடர்ச்சியான பாராளுமன்ற அரசியலுக்கு இன்றுடன் 40 வருடங்கள்..


ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான பாராளுமன்ற அரசியலுக்கு இன்றுடன் 40 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 


இதேபோன்று பிரதமர் பதவியிலும் சாவதேச ரீதியிலும் சாதனை படைத்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் 40 வருடங்களை நிறைவு செய்வதை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றத்தில் பிரவேசித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் பதவி வகித்ததுடன், இளைஞர் அலுவல்கள் மற்றும் தொழில் கல்வி, கைத்தொழில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களாகவும் பதவி வகித்தார். 

1993ஆம் ஆண்டில் முதல் முறையாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க பின்னர் 2001ஆம் ஆண்டிலும், 2016ஆம் ஆண்டிலும் பிரதமர் பதவியை வகித்து சர்வதேச ரீதியில் சரித்திரம் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

40 வருடங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் வகிக்கும் ஒரேயொரு மக்கள் பிரதிநிதி என்ற பெருமையையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையே சாரும்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் பாராளுமன்றம் முதல் முறையாக ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கூடியது. பிரதமருக்கு நல்வாழ்த்து தெரிவிப்பதற்காக பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்றும் அன்று நடைபெற்றது. 

1977ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி திறந்த பொருளாதார முறையை அறிமுகப்படுத்திய பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார புரட்சி விஞ்ஞான ரீதியிலான மாற்றங்கள் குறித்த கண்காட்சி ஒன்றும் இம்மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் மூன்று நாட்களுக்கு இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை பியகம தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தொடர்ச்சியான பாராளுமன்ற அரசியலுக்கு இன்றுடன் 40 வருடங்கள்.. ரணில் விக்ரமசிங்க அவர்களின் தொடர்ச்சியான பாராளுமன்ற அரசியலுக்கு இன்றுடன் 40 வருடங்கள்.. Reviewed by Madawala News on 7/22/2017 10:41:00 PM Rating: 5