tg travels

வெளியேறுவதாக இருந்தால் 41 பேரும் வெளியேறுவோம்..


அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதாக இருந்தால் 18 பேர் அல்ல அனைவரும் வெளியேறிவிடுவோம் என அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சுதந்திர கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படமாட்டது என சுதந்திர கட்சி செயலாளர் துமிந்த கூறியிருப்பதை அவரது சிறுபிள்ளை தனத்தைக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர்,


இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று அவசியமில்லையென்பதில் மகாநாயக்கர்களின் நிலைப்பாடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடும ஒன்றென தெரிவித்துள்ளார்.


இருக்கும் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் போதுமென்பதே இரு தரப்பினதும் நிலைப்பாடென டிலான் தெரிவித்துள்ள அதேவேளை,புதிய அரசியலமைப்பு உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




வெளியேறுவதாக இருந்தால் 41 பேரும் வெளியேறுவோம்.. வெளியேறுவதாக இருந்தால் 41 பேரும் வெளியேறுவோம்.. Reviewed by Madawala News on 7/13/2017 09:23:00 PM Rating: 5