tg travels

இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி .

இலங்கை –சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே­யொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடை­பெற்று முடிந்த நிலையில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணியின் எர்வின் விளாசிய சதத்தால் (160) அந்த அணி முதல் இன்­னிங்ஸில் 356 ஓட்­டங்­களைக்

குவித்­தது. பின்னர் முதல் இன்­னிங் ஸை தொடங்­கிய இலங்கை அணி 346 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. 

முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் சிம்­பாப்வே அணி 2ஆ-வது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. 3ஆ-வது நாள் ஆட்ட நேர முடிவில் சிம்­பாப்வே 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 252 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. சிகந்தர் ரசா 97 ஓட்­டங்­க­ளு­டனும், மெல்கம் 57 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர்.

நேற்று 4ஆ-வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. ஆட்­டத்தின் முதல் ஓவ­ரி­லேயே சிகந்தர் ரசா சதத்தை தொட்டார். மெல்கம் 68 ஓட்­டங்களுடனும், சிகந்தர் ரசா 127 ஓட்­டங்­க­ளுடனும்  ஆட்­ட­மி­ழந்­தனர்.

அடுத்து வந்த தலைவர் கிரிமர் 48 ஓட்­டங்கள் எடுக்க சிம்­பாப்வே அணி 2-ஆவது இன்­னிங்ஸில் 377 ஓட்­டங்­களைக் குவித்­தது.

சிம்பாப்வே முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­ததால் ஒட்­டு­மொத்­த­மாக 387 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது. இதனால் இலங்கை அணியின் வெற்­றிக்கு 388 ஓட்டங் கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

நேற்று 388 ஓட்ட இலக்கை நோக்கி ஆரம்பமான இலங்கையின் துடுப்பாட்டம் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

இறுதி நாளான இன்று 7 விக்கட்டுக்களை வைத்து 218 ஓட்­டங்­களைப் பெற வேண்டிய நிலையில் ஆட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் இன்னும் 2 விக்கட்டுக்களையும் இழந்து தோல்வி முகம் காட்ட ஆரம்பித்தது.

பின்னர் களமிறங்கிய திக்வெல்ல மற்றும் குனரத்ன ஆகியோரின் ஆபார, நிதான ஆட்டத்தால் வெற்றிப்பாதைக்கு கொண்டு வரப்பட்டு இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.



 


இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி . இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி . Reviewed by Madawala News on 7/18/2017 03:18:00 PM Rating: 5