tg travels

மத்திய மாகாணத்தில் 5000 டெங்கு நோயாளர்கள் – ஏழுபேர் உயிரிழப்பு .


( மொஹொமட் ஆஸிக்) 

மத்திய மாகாணத்தில் இவ் வருடம்  கடந்த ஆறு மாதங்களில் 4936 டெங்கு  நோயாளர்கள்  பதிவாகி உள்ளதாகவும்  அதில் ஏழு  பேர்  உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார  அமைச்சின்  தேசிய டெங்கு  ஒழிப்பு  பிரிவு  தெரிவித்துளளது.

மத்திய மாகாண சுகாதார  பனிப்பாளர் சாந்தி சமரசிங்க கருத்து  தெரிவிக்கையில மாகாணத்தில்  மீண்டும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பறவி வருவதாக தெரவித்தார்.

இலங்கை முழுவதிலும்  டெங்கு காய்ச்சல் பறவி வரும் நிலையில் மத்திய மாகாணத்தின் நிலை பற்றி அவரிடம் வினவிய  போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த மாதங்களில் மத்திய மாகாணத்தில் டெஙகு காய்ச்சல் பறவும் வேகம் குறைந்திருந்த போதும்மே, ஜுன் ஆகிய மாதங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும்  வேகமாக பறவ  ஆரம்பித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டி மா நகர சபைப்பிரிவு, மற்றும் மாத்தனை மா நகர சபைப்  பிரிவு ஆகிய பிரதேசங்களில் டெங்கு நோய் சீக்கிரமாக பறவுவதாகவும், அதனை தவிர மேலும் சில சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுகளிலும்  டெங்கு காய்ச்சல் வேகமாக பறவும் பிரதேசஙகளான இனம் கானப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் இது வரை 4936  டெங்கு நோயாளர்கள் இனம் கானப்பட்டுள்ளதாகவும்  அதில் ஏழுபேர்  உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும்  தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் 3647  நோயாளர்களும், மாத்தளை மாவட்டத்தல் 977  டெங்கு நோயாளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 312  நோயாளர்களு ம் இனம் கானப்பட்டுளள்தாகவும் அவர்களுல்  ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவு  தெரிவித்துள்ளனர்.

. கண்டி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில்  மட்டும் 1516  நோயளர்கள் இனம்  கானப்பட்டுள்ளதுடள் மாத்ளைமாவட்டத்தில்மே மாத்தில் 315  பேரும் இனம்  கானப்பட்டுள்ளனர்.

டெங்கு நுலம்பு பரவும் இடங்களை அழித்து டெங்கு நோளை  நுவரெலியா மாவட்டத்தில்  94  நோயாளர்களும் இனம்  கானப்படுள்ளனர்.
இந் நோயை கடடுப்படுத்துவதற்கு அரச தரப்பினரின் உதவி கிடைத்த போதும் பொது மக்கள்  இது தொடர்பில் செலுத்தும் கவனம மிகவும் குறைவு என்றும் இது  நோயை கட்டுப்படுத்துவதற்கு தடையாக இருப்பதாகவும் மாகாண சுகாதார பனிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறு இருந்தாலும் ஜனாதிபதியின் விஷேட திட்டத்திற்கு அமைய மத்திய மாகாணத்தலும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விஷேட திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் எதற்கு பொது மக்களது உதவி மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்,

2017 07 05   ஆஸிக்

மத்திய மாகாணத்தில் 5000 டெங்கு நோயாளர்கள் – ஏழுபேர் உயிரிழப்பு . மத்திய மாகாணத்தில்  5000 டெங்கு நோயாளர்கள் – ஏழுபேர்  உயிரிழப்பு . Reviewed by Madawala News on 7/06/2017 09:46:00 AM Rating: 5