tg travels

தாய் மற்றும் மகள் மீது பன்றி இறைச்சி வீசியவருக்கு 6 மாத சிறை ! # இங்கிலாந்து 


முஸ்லிம் பெண் மற்றும் அவரது இளம் பெண்பிள்ளை மீது பன்றி இறைச்சியால் தாக்குதல் நடத்தியவருக்கு ஆறு மாதம் சிறைந்தண்டனை வழங்கப்படுள்ளது.


இங்கிலாந்தில் என்பீல்டில் கடந்த 8 ம் திகதி வீதியில் சென்றுகொண்டிருந்த 36 வயது தாய் மற்றும் இளம் மகள் ஆகியோர் வீதியில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது அலெக்ஸ் சிவாஸ் என அறியப்பட்டுள்ள நபர் பன்றி இறைச்சியை முகத்தில் வீசி அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பில் விசாரணை செய்த ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் குறித்த நபருக்கி 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாய் மற்றும் மகள் மீது பன்றி இறைச்சி வீசியவருக்கு 6 மாத சிறை ! # இங்கிலாந்து  தாய் மற்றும் மகள் மீது பன்றி இறைச்சி வீசியவருக்கு 6 மாத சிறை ! # இங்கிலாந்து  Reviewed by Madawala News on 7/01/2017 12:22:00 PM Rating: 5