Ad Space avaiable

ஆப்கான் மாணவிகள் 6 பேருக்கு வீசா வழங்கிய டிரம்ப்...


அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நடைபெறும் ரெபோ போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் பாடசாலை மாணவிகள் ஆறுபேருக்கு வீசா வழங்க அமெரிக்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்த நிலையில், 

அமெரிக்க ஜனாதிபதியின் நேரடி தலையீட்டினால்  அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆப்கானிஸ்தானின் ஹேரத் மாகாணத்தைச் சேர்ந்த இந்த மாணவர்கள் தமது திறமைகளின் அடிப்படையில் ரொபோ போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை அறிவித்துள்ளது.


அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் எதிர்வரும் 16 ஆம் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 157 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


ஆப்கான் மாணவிகள் 6 பேருக்கு வீசா வழங்கிய டிரம்ப்... ஆப்கான் மாணவிகள் 6 பேருக்கு வீசா வழங்கிய டிரம்ப்... Reviewed by Madawala News on 7/14/2017 03:24:00 PM Rating: 5