Ad Space avaiable

எகிப்து தற்கொலை தாக்குதலில் பத்து பொலிசார் பலி. சவூதி பொலிசார் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் பலி 6 பேர் காயம்.


-Razana Manaf-
எகிப்தின் தென் நகரான அல் ரபாஹ் வில்லேஜில் அமைந்திருக்கும் அல் பெர்த் பொலிஸ் சோதனை சாவடியில் இன்று வெள்ளிகிழமை  தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் மேற்கொண்டதில் பத்து பொலிசார் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டும் மேலும் இருபது பேர் காயமடைந்துமிருப்பதாக எகிப்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

தாக்குதலுக்கு முன்னதாக பாரியளவான துப்பாக்கி பிரயோகங்கள் சோதனை சாவடி பகுதியில் நடந்ததாகவும் அதனை தொடர்ந்து வெடிகுண்டு நிரப்பட்ட காரொன்று சோதனை சாவடியை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. முகமூடியணிந்த நிலையில் வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, தாக்குதலை நடத்தியது எந்த குழுவினர் என்று இன்னும் உறுதியாக கூறப்படாத நிலையிலும், எந்தவொரு குழுவும் தாக்குதலுக்கு இதுவரையிலும் உரிமை கோராத நிலையிலும், இந்த தாக்குதலை தாஈஷ் குழுவே மேற்கொண்டிருக்க கூடும் என்று எகிப்திய காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும்,

நேற்று வியாழக்கிழமை சவூதி அரேபியாவின் காதிப் நகரிலும் பொலிசார் மீது தீவிரவாத குழுவினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் ஒரு பொலிஸ் வீரர் கொல்லப்பட்டும் மேலும் ஆறு பேர் காயமடைந்தும் இருந்ததாக சவூதி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் சவூதி அரேபியாவின் காதிப் நகரில் அல் முசவ்வரா பகுதியில் இடம்பெற்றிருகின்றது, இந்த தாக்குதலில் உயிரழந்த பொலிஸ் வீரர் அப்துல்லாஹ் தெரிக்கி அல் துருக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும், முன்னதாக செவ்வாய்க்கிழமை நடந்த இது போன்ற மற்றுமொரு தாக்குதலில் சார்ஜன்ட் தர நிலையில் உள்ள ஆதில் பலாஹ் அல் ஒதைபி கொல்லப்பட்டும் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்துமிருந்தனர்.

அல் முசவ்வரா பிரதேசம் அண்மையில் சவூதி அரேபிய அரசினால் அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசமாகும். இங்கு ஏராளமான வீடுகள் கை விடப்பட்ட நிலையில் இருக்கின்றன இது தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிக்கிடக்கின்றது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் யாரென இன்னும் உரிமை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி கூட்டணி நாடுகள் மீது அடுக்கடுக்காக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களினால் மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் நாட்களில் பாரியளவிலான சண்டைகள் ஏற்பட கூடிய நிலைமையின் அறிகுறி தோன்ற ஆரம்பித்துள்ளது, தங்களின் நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை அவதானித்துக்கொண்டு இந்த நாடுகள் அமைதியாக இருக்கப்போவதில்லை, பதில் நடவடிக்கையயை அந்த நாடுகள் கைக்கொள்ளுமிடத்து பாரியளவான சேதங்கள் ஏற்பட கூடிய நிலைமை ஏற்படும்.

http://www.khaleejtimes.com/region/10-killed-in-a-car-bomb-blast-in-egypt-

http://www.arabnews.com/node/1125486/saudi-arabia
எகிப்து தற்கொலை தாக்குதலில் பத்து பொலிசார் பலி. சவூதி பொலிசார் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் பலி 6 பேர் காயம். எகிப்து தற்கொலை தாக்குதலில்  பத்து பொலிசார் பலி. சவூதி பொலிசார் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் பலி 6 பேர் காயம். Reviewed by Madawala News on 7/07/2017 03:10:00 PM Rating: 5