Kidny

Kidny

தவறு செய்தவர்கள், கழா கத்ரை கூறி பிரச்சாரம் செய்வது அசிங்கமானது.


மாவிலாறு அணைக்கட்டுக்கு அண்மையில் மூழ்கி மரணித்த மாணவர்களின் மரணத்தைப் பற்றி பல்வேறு விதமான கோணங்களில் கருத்துகள் வெளியிடப்படுகின்றன.

தமது பொறுப்புகளில் அசமந்தமாக நடந்துகொண்டவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது கழாகத்றை மறுப்பதற்கு சமம் என்றும், ஸப்ர் (பொறுமை) இல்லாத செயல் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. தவறு செய்தவர்களும் இப்படி பிரச்சாரம் செய்வது அசிங்கமானது.

இது பற்றிய மூன்று விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

1. கழா கத்ர்

பூமியில் நிகழ்கின்ற அனைத்தும் அல்லாஹ்வின் திட்டமிடலின் படியே நடக்கின்றன. ஆனால் இந்த வாதத்தைப் பயன்படுத்தி தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது.

ப்ரேக் இல்லாத வண்டி ஒன்றை, தெரிந்து தெரிந்தே அதி வேகமாக ஓட்டி நடந்த விபத்தில் ஒருவர் இறந்தால் "கழா கத்ரை" காரணம்காட்டி பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.

2. ஸப்ர் (பொறுமை)

இரண்டு வகை பொறுமைகள் இருக்கின்ற.

a) வாஜிப் (கட்டாயம்) ஆன பொறுமை
b) நஃபில் (மேலதிகம்) ஆன பொறுமை

எல்லா நிலைமைகளிலும் ஹராமானவற்றைத் தவிர்ப்பதும், வாஜிபானவற்றை செய்வதும் வாஜிபான பொறுமையாகும். உதாரணமாக, இழப்பு ஒன்றின்போது அந்த இழப்புக்காக அல்லாஹ்வுடன் கோபப்படாதிருத்தல், இழப்புக்குக் காரணமானவர்களை அடிக்காதிருத்தல் போன்றவற்றை வாஜிபான பொறுமை எனலாம். இழப்பிற்கு காரணமானவர்களை மன்னித்தல் நஃபிலான பொறுமையாகும்.

இயல்பாகவே மனிதர்கள் மன்னிப்பதற்கு ஒரு கால அவகாசத்தை எடுத்துக்கொள்கின்றனர். இழப்புக்குக் காரணமானவர்களிடம் தவ்பாவின் அடையாளங்கள் (signs of remorse) காணப்படுகின்றபோது மன்னித்தல் விரைவாக நிகழும். "எல்லாம் கழா கத்ர் படி நடந்துவிட்டது, என்கையில் ஒரு தவறும் இல்லை" என்று பிரச்சாரம் செய்வது மன்னிப்பை தாமதமாக்கும், அல்லது தடுக்கும்.

3. அமானத் (பொறுப்பு)

பொறுப்பு ஒன்றை எடுத்து செய்யும்போது தவறுகள் நிகழலாம். ஆனால், அந்த தவறு நிகழ்வதைத் தடுப்பதற்கு பொறுப்பாளர் முயன்றிருக்க வேண்டும். பொறுப்பை செய்யும்போது நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ள தவறு ஒன்று நடந்து முடிந்த பின், பொறுப்பாளரிடம் உள்ள ஒரே பதில் "அந்த இடத்தில் நான் இருக்கவில்லை" என்பது மட்டுமாக இருந்தால், அல்லது "கழா கத்ரில் இருந்தது நடந்துவிட்டது" என்பது மட்டுமாக இருந்தால், அந்தப் பொறுப்பில் (அந்த அமானிதத்தில்) அவர் நீதமாக நடக்கவில்லை என்பதே அர்த்தம்.

ஒரு சிறுவனின் உயிர் பற்றி அப்துல்லாஹ் விடம் இருந்த பொறுப்புணர்வில் ஒரு சிறு பகுதிகூட அந்த உஸ்தாத்மாருக்கு இருக்கவில்லை என்பதே உண்மை.

Husni Jabir ( வபாத்தான அப்துல்லா 17 வயது சிறுவனின் மைத்துனர்-
17.07.2017
தவறு செய்தவர்கள், கழா கத்ரை கூறி பிரச்சாரம் செய்வது அசிங்கமானது. தவறு செய்தவர்கள், கழா கத்ரை கூறி பிரச்சாரம் செய்வது அசிங்கமானது. Reviewed by Madawala News on 7/17/2017 10:03:00 AM Rating: 5