Kidny

Kidny

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மடவளைக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு.


மடவளை பஸார்  ஜம்இய்யாக் கிளையின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இன்று (22.07.2017) சனிக்கிழமை மாலை மடவளை ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட ஜம்இய்யா தலைவர் மற்றும் கொழும்பு தலைமையக பிரதிநிதிகளின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பின்வரும் ஆலிம்கள் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

1. தலைவர்: அஷ்-ஷேக்ஹ் A.M. ஹம்ஸா (பின்னூரி)

2. செயலாளர்: அஷ்-ஷேக்ஹ் A.A.M. சிராஜ் (ரஹீமி)

3. பொருளாளர்: அஷ்.ஷேக்ஹ் M.B. அஹமட் நிஸ்ரி (இஸ்லாஹி)

உப-தலைவர்களாக:

4. அஷ்-ஷேக்ஹ் M. பஹ்ருத்தீன் (நத்வி)

5. அஷ்-ஷேக்ஹ் J.M. நாஸிர் (ஸெய்லானி)

6. உப-செயலாளர் M.M. ரிஸான் (ரஹீமி)

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து கூட்டப்படும் முதலாவது கூட்டத்தில் மேற்படி நிர்வாகிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் மடவளைக் கிளையின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும்.

தகவல்
ஊடகப் பகுதி,
ஜம்இய்யதுல் உலமா மடவளைக் கிளை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மடவளைக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மடவளைக் கிளையின் புதிய நிர்வாகத் தெரிவு. Reviewed by Madawala News on 7/22/2017 10:04:00 PM Rating: 5