Kidny

Kidny

கூட்டிச்சென்ற உஸ்தாத்மார்களின் பொறுப்பற்ற தன்மையும், கவனயீனமுமே அப்துல்லாஹ்க்கள் உயிரிழக்க காரணம். சம்பவத்தை விபரிக்கிறார் மைத்துனர்.


(நேற்று குருணாகல் - கெகுணகொல்ல மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த  சோக சம்பவம் தொடர்பில் ஒரு மாணவரின் மைத்துனர் வெளியிடும் தகவல்கள்)

ஒரு சிறுவனின் உயிர் பற்றி  அப்துல்லாஹ் விடம் இருந்த பொறுப்புணர்வில் ஒரு சிறு பகுதிகூட அந்த உஸ்தாத்மாருக்கு இருக்கவில்லை.

அப்துல்லாஹ் தனது சகபாடிகளுடனும் உஸ்தாத்மாருடனும் இன்னொரு உஸ்தாதின் திருமணத்திற்கு செல்லும் வழியில் மாவிலாறு அணைக்கட்டுக்கு அண்மையில் இறங்கினார்கள்.

பின், மாணவர்களை விளையாட விட்டுவிட்டு உஸ்தாத்மார்அ னைவரும் வேறு ஒரு இடத்துக்கு விளையாடச் சென்றார்கள். 

சிறிது நேரத்தின் பின் அங்கிருந்த தோணி ஒன்றில் இரண்டு மாணவர்கள் ஏறி சுற்றிவந்தார்கள். பின் அதில் மூன்று பேர் ஏறி சுற்றி வந்தார்கள். பின் ஏழு பேர் ஏறி சுற்றி வந்தார்கள். அதில் அப்துல்லாஹ்வும் ஒருவர்.

 பாரம் தாழாமல் தோணி மூழ்கிவிட்டது. என்றாலும் தோணி ஆழமான பகுதிக்கு சென்றிருக்கவில்லை. அப்துல்லாஹ் நடந்தே கரைக்கு வந்தார்.

பின்னர் பதினொரு வயது சிறுவன் ஒருவர் மூழ்குவதைக் கண்டு மீண்டும் நடந்தே சென்றார். அந்த இடத்தில் இருவரும் சகதியில் கால் சிக்கி அமிழ்ந்தார்கள்.

பின் நீச்சல் தெரிந்த சில மாணவர்கள் அந்த இருவரையும் கரை சேர்த்தனர். கரை சேர்க்கும்போது இருவருக்கும் உயிர் இருந்தது. அந்த இடத்தில் முதலுதவி தெரிந்த யாரும் இருக்கவில்லை. அந்த சிறுவனும், சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முயன்ற அப்துல்லாஹ்வும் குளக்கரையிலேயே தமது இறுதி மூச்சை விட்டார்கள்.

இவ்வளவும்நடந்து முடிந்த பின் உஸ்தாத்மார் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்த இடம் பாதுகாப்பற்றது என்பதையும் பலர் இந்த இடத்தில் இறந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் முதலைகள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கின்றது என்பதையும் இவ்வளவும் நடந்த பின்னரே ஊரார் மூலம் அறிந்துகொண்டார்கள்.

நாங்கள் காணவில்லை என்று காரணம் சொல்லும் உஸ்தாத்மார் யாரும் காண்பதற்குரிய இடத்தில் இருக்கவில்லை.

அவர்கள் தமது அமானிதத்திலே விட்ட குறையை கழா கத்ரின் பெயரால் மறைத்துவிட முடியாது.

ஒரு சிறுவனின் உயிர் பற்றி அப்துல்லாஹ் விடம் இருந்த பொறுப்புணர்வில் ஒரு சிறு பகுதிகூட அந்த உஸ்தாத்மாருக்கு இருக்கவில்லை.

நீதியாளனுக்கெல்லாம் நீதியாளனிடம் எனது முறைப்பாட்டை முன்வைக்கிறேன்.

முக்கிய குறிப்பு: பயணத்தில் கலந்துகொண்ட ஒருவரின் உதவியுடன் இந்த சம்பவம் தொகுக்கப்பட்டது.

- ஹுஸ்னி ஜாபிர் ( வபாத்தான அப்துல்லா 17 வயது) மைத்துனர் - 
கூட்டிச்சென்ற உஸ்தாத்மார்களின் பொறுப்பற்ற தன்மையும், கவனயீனமுமே அப்துல்லாஹ்க்கள் உயிரிழக்க காரணம். சம்பவத்தை விபரிக்கிறார் மைத்துனர். கூட்டிச்சென்ற  உஸ்தாத்மார்களின் பொறுப்பற்ற தன்மையும், கவனயீனமுமே அப்துல்லாஹ்க்கள் உயிரிழக்க காரணம். சம்பவத்தை விபரிக்கிறார் மைத்துனர். Reviewed by Madawala News on 7/16/2017 10:55:00 PM Rating: 5