Ad Space Available here

நம்பிக்கை இழக்க வைக்கும் அரசியல் வியாபாரிகளை துரத்தியடிக்க வேண்டும்.


இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான்.
யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.

தற்போது இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிலைமையும் இவ்வாறே இருக்கிறது. பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த அரசியல் வியாபாரிகள்.

பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம்.

செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள் அது உண்மைதான்.

அது போன்றுதான் இன்று முஸ்லிம்கள் என்ன செய்வது? எப்படி இனவாதிகளை அடக்குவது என்று யோசித்து யோசித்து நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறோம் இது மிக வேதனையைத் தருவது மட்டுமல்ல எதிர்கால சந்ததினர்களைக் கூட ஒரு அடிமை வாழ்கையை வாழ வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

நாம் நம்பிக்கையை இழப்பதனால் எந்த மாற்றமும் நடைபெற போவதில்லை. மாறாக நாம் இனவாதிகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு திசையிலும் தனக்கு சார்பான அரசியல் வியாபாரிகளின் இலாபங்களுக்காகவும் அவர்களின் இருப்பை உறுதி செய்வதற்காகவுமே நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே உண்மை.

அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலிம் நாம் இப்படிப்பட்ட நேரத்தில் சிந்திக்க வேண்டும் இவ்வாறான அரசியல்வாதிகளை பாரளுமன்றம் அனுப்பியது. அவர்களின் வியாபரங்களை விருத்தி செய்து கொண்டு வங்கி கணக்கை கூட்டுவதற்காவா? அல்லது சமுகத்தின் பிரச்சினையை உரிய இடத்தில் பேசி உரிமையை பெற்றுக் கொடுப்பதற்காகவா?
அப்படியென்றால் தற்போது இந்த சூழலில் எதை பெற்றுக் கொடுத்தார்கள் இவர்கள் சமுகத்துக்காக இதுவரை??

உரிமையை பெறுவது என்றால் இப்படியே ஒவ்வேறு பிரதேசத்துக்கும் ஒவ்வொருத்தராக சென்று மக்கள் மத்தியில் வீரப்பு வசனம் பேசினால் போதுமா உரிமை கிடைத்து விடுமா?
இல்லை தனக்கு விரும்பியதுபோல் அறிக்கை விட்டும் பாராளுமன்றதில் வாய் கிழிய கத்தியும், ஜனாதிபதி ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு போட்டோ எடுத்து மக்களுக்கு காட்டினால் பிரச்சினை தீர்ந்து விடுமா??

இவ்வளவு பிரச்சினைகள்,நஸ்டங்கள், அழிவுகள் நடந்தும் இதுவரைக்கும் இந்த அரசியல்வாதிகள் வயிறு வளர்க்கும் கேடுகெட்ட வறட்டு கெளரவங்களை தூக்கி வீசி விட்டு. சமுகத்துக்காக ஒன்றாக சேர்ந்து நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறார்களா? இல்லவே இல்லை. அப்படி இவர்களை ஒன்று சேர விடாமல் தடுப்பது பதவிமோகமே தவிர வேறு ஒன்றுமில்லை.

இனியாவது மக்களைப் பத்தி சிந்திப்பார்களா??
நிச்சயம் சிந்திப்பார்கள் அது எப்படி?

அதற்காக நாம் அனைவரும் இந்த மானம் ரோசம் இல்லாத பொய் அரசியல்வாதிகள் அனைவரையுமே புறகணிக்க வேண்டும் எல்லா பிரதேசங்களிலும் எல்லா ஊர்களிலும்.

அது எப்படி??

இந்த வீரப்பு வியாபாரிகள் எந்த ஊருக்கு வருகிறார்களோ அந்த ஊர் மக்கள் இவர்களை வரவிடாமல் தடுக்க வேண்டும். அல்லது வந்தவர்களை திரும்பி போக விடாமல் தடுப்பு காவலில் வைக்த்து அவர்களிடம் நேரடியாக உறைக்கும்படி கேட்க வேண்டும் மக்களைவிட மார்க்கத்தை விட உங்களுக்கு பதவிதானா முக்கியம்?

சமுகத்தின் இருப்பு,பாதுகாப்பு தினந்தோறும் கேள்வியாகிக் கொண்டிருக்கு நீங்கள் உல்லாசமாக உலா வருகிறீர்கள் இதற்குத்தானா உங்களை தெரிவு செய்தோம்? நீங்கள் இப்படியே ஆளுக்கொரு அறிக்கையை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். போதாக் குறைக்கு இடக்கிடை மக்களுக்காக பதவியையும் துறக்கவும் தயார் என்றும் இளைஞர்களை மடையனாக்குறீர்கள் இதுதானா உங்கள் வீரம் தைரியும் ??

இப்படிப்பட்ட கோழைத்தனமான தைரியத்தை யாரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்கள்? வீரமுள்ள பரம்பரையில் வந்தவர்கள் என்பதை அர்ப்ப சொற்ப்ப சுகங்களுக்காக மறந்து விட்டீர்களா?

அதற்காக உங்களை நாங்கள் சண்டை பிடிக்க செல்லவுமில்லை யுத்தம் செய்ய செல்லவுமில்லை. ஆகக் குறந்தது எல்லோரும் சேர்ந்து மக்களுக்காக உங்கள் பதவிகளை தற்காலிகமாவது ராஜனாமா செய்து பாருங்கள் அப்போது தீர்வு நிச்சயம் கிடைக்க வாய்ப்புள்ளது இன்சாஅல்லாஹ்.

ஆனால் நீங்கள் குட்டகுட்ட நீங்க குனிந்து கொண்டு முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். குட்டுவது வாங்குவது உங்களுக்கு பிரச்சினை இல்லை.  ஏனென்றால் நீங்கள் எதிர்பார்ப்பது பதவிகளை மட்டுமே. ஆனால் குட்டப்படுபவர்கள் ஒன்றும் அறியாத ஏழை மக்களாச்சே அதுதான் உங்கள் கண்ணுக்கு இவைகள் தெரியாமலிருக்கிறது.

பதவிதான் பிரச்சினைக்கு தீர்வு என்றால் நிச்சயம் நாங்கள் அதை தூக்கி வீசவும் தயார் என்றெல்லாம் பழய பல்லவியை கூறாமல் எல்லோரும் சேர்ந்து இந்த அரசை விட்டு வெளியே செல்லுங்கள். அப்போது நிச்சயம் அரசாங்கம் ஆட்டம் கானும். செய்தி வெளியுலகத்துக்கும் சென்று தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

அதை விட்டுவிட்டு அரசுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு பின்கதவால் சென்று முன்கதவால் வந்து மக்களுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தால் அரசும் இப்படியேதான் கண்கெட்டுக் கொண்டு மெளனமாய் இருக்கும்.இனவாதிகளும் அவர்களின் நரி புத்தியை காட்டிக் கொண்டிருப்பார்கள். அதற்குப் பிறகு ஊருக்கு ஊர் வந்து ஊழை இடுவதில் எதுவும் நடக்கப் போவதில்லை.

அரசியல்வாதிகளே நீங்கள் இப்படியே அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்து சமுகத்துக்காக இதுவரை சாதித்தது என்ன? ஒன்றுமே இல்லை. ஆனால் நீங்கள் சம்பாதித்தது ஏராளமேராளம் அதில் எந்த சந்தேகவுமில்லை.

"நேற்று என்பது முடிந்து போனவையாக இருந்தாலும் அது தந்து விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாவலுக்கு ஒப்பானதாகும் என்பது போல"

அளுத்கம கற்றுக் கொடுத்த பாடம் என்றும் எம்மனதில் அழியாதைவகவே இருக்கிறது.அதைப்போன்று எந்தவொரு கமைக்கும் இனிமேல் வரக்கூடாது என்பதே மக்ளின் ஆசையாகும்.

இந்த ஆசை நிறைவேறி நின்மதியாக வாழவேண்டும் என்றால் முதலில் இந்த வியாபார அரசியல்வாதிகள் உண்மையாக மக்களுக்காக அல்லாஹ்வைப் பயந்து செயற்பட வேண்டும்.  அல்லது அவர்களை நாம் புறக்கணித்து துரத்த வேண்டும் அரசியலை விட்டு அப்போதுதான் இந்த நாட்டில் நின்மதியாக முஸ்லிம்களும் எதிர்காலத்தில் வாழ முடியும்.

"சிறிய நெருப்பை ஊதி அணைக்கின்ற காற்றுத்தான் பெரிய நெருப்பை ஊதி வளர்க்கிறது"

உண்மையான சமுகத்துக்காக பயனிக்கின்ற அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் பிரச்சினையை தீர்க்க முடியும்.
அதே போன்று தனக்கு மட்டும் என்று பயணிப்பவர்களால் ஊதி வளர்க்கத்தான் முடியும்.

மக்களே இளைஞர்களே சிந்தித்து செயற்படுவோம்.போலிகளை நம்பி மீண்டும் ஏமார்ந்தால் இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டி வரும் நமது உரிமைகளை கேட்டு.

வெற்றி நிச்சயம் இன்ஸாஅல்லாஹ்.

ஒலுவில் ஜெலில்
நம்பிக்கை இழக்க வைக்கும் அரசியல் வியாபாரிகளை துரத்தியடிக்க வேண்டும். நம்பிக்கை இழக்க வைக்கும் அரசியல் வியாபாரிகளை  துரத்தியடிக்க வேண்டும். Reviewed by Madawala News on 7/02/2017 12:10:00 PM Rating: 5