Yahya

மட்டு அரசாங்க அதிபர் சார்ள்சுக்கு ஆதரவாக திரண்டெழுந்த மட்டு அரச நிருவாக உத்தியோகத்தர்கள்.


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்சினை இட மாற்றக்கோரியும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச்செய்யக்கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று 10.07.2017 திங்கட்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், சிறீனேசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் ஊழலுக்கு எதிராண மக்கள் பேரணியும் நியாயமான அதிகாரிகளின் இடமாற்றத்தினை ரத்துச்செய்வதற்குமான வேண்டுகோள் என்னும் தலைப்பில் குறித்த கவன ஈர்ப்பு போராட்டமமும் பேரணியும் நடைபெற்றது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும்போது அது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.ஆனால் ஊழலுடன் சம்பந்தப்பட்டவரை வைத்துக்கொண்டு ஊழல் தொடர்பில் விசாரணைசெய்யமுடியாது எனவே மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்து ஊழல் விசாரணைகள் நடாத்தப்படவேண்டும் எனவும் அங்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதை தொடர்ந்து இன்று செவ்வாய்கிழமை 11.07.2017 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளில் கடமையாற்றும் செயலாளர்கள், மேலதீக செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயல்கத்தில் கடமையாற்றும் அணைத்து நிருவாக உத்தியோகத்தர்கள் அடங்கலான பாரிய கண்ட ஆர்ப்பாட்டம் நேற்று 10.07.2017 இடம் பெற்ற கவ ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஆதரவாகவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி சதுக்கம் வரையிலும் நடைபவணியாக சென்று ஊடகங்களுக்கு அறிக்கைகளும் விடப்பட்டது.


அத்தோடு அரசாங்க அதிபர் சார்ள்ஸ், மற்றும் அரசாங்க நிருவாக அதிகாரிகள் தொடர்பில் 10.07.207 நடாத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் போலியான ஆதராமற்ற செய்திகளுக்கு எதிரானதுமான துண்டு பிரசுரம் மட்டு அரச நிருவாக உத்தியோகத்தர்களினால் வெளியிடப்பட்டதுடன் 10.07.207 திங்கட் கிழமை அரசாங்க அதிபர் மற்றும் அரச நிருவாக உத்தியோகத்தர்களுக்கு இடம் பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ரப்பட்டத்துக்கு எதிரான மகஜர் ஒன்றும் மாட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்சிடம் அரச நிருவாக உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்டது. வெளியிடப்பட்ட  துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்ட தெளிவான கருத்துகளோடு அரசாங்க அதிபருக்கு ஆதரவாக இன்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தினுடைய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற வலைப்பக்கங்களின் மூலம் வெளியிடப்படும் போலியான ஆதாரமற்ற செய்திகளின் பிரசுரிப்புக்களை நாம் மிகவன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அண்மைக்காலமாக சமூக வலைத் தளங்கள் மற்றும் உத்தியோகபூர்வமற்ற  வலைப்பக்கங்களில்; மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பல ஊழல் மோசடிகள் இடம் பெறுவதாக பல்வேறு போலியான ஆதாரமற்ற செய்திகள் பரவலாக பிரசுரிக்கப்படுகின்றன. இத்தகைய உண்மைக்குப் புறம்பான அர்த்தமற்ற செய்திகளை தம் சுயஅனுமானத்தின்கீழ் மாத்திரம் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டதாக பிரசுரிப்பதனால் எம் மாவட்டத்தின் நல்லிணக்கத்திற்கு முரண்பாடும், மக்கள்  மத்தியில் அபகீர்த்தியையும் இவ்வதந்திகள் ஏற்படுத்தி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

கடந்த முப்பது வருட கால போர் மற்றும் பல்வேறு அனர்த்தங்களிலிலிருந்து மீண்டெழுந்து படிப்படியாக அபிவிருத்தி பாதையில் எம்மக்களையும் இணைத்துக்கொள்ளும் எத்தனையோ செயற்றிட்டங்கள் பிரதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் உண்மையான பெறுபேற்றை சற்றும் சுயமாக உணராது பிற்போக்குச் சிந்தனையினைத் தூண்டிவிடும் வகையில் இத்தகைய பிரசுரிப்புக்களை மேற்கொண்டு வருவது வருந்தத்தக்கது. அரசினால் மக்களின் தேவையை கருதி அபிவிருத்தி  திட்டங்கள்
 அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.

இச்செயற்றிட்டங்கள் மீதாக எமது மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் தம் அர்ப்பணிப்பான சேவையினை முன்னுறுத்தி காத்திரமான பணிகளை உரிய காலத்தில் வினைத்திறனுடன் நிறைவேற்றி வருகின்றமையினை யாரும் மறுக்க முடியாது.


இதன்போது பக்கச்சார்பற்று வெளிப்படைத்தன்மையாகவே உரிய தகவல்களை நாம் எம் மாவட்ட வாழ் மக்களுக்கு கிரமமாக வழங்கி வருகின்றோம். தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழமைந்த விசேட திட்டங்களும் மாவட்ட ரீதியில் சகல செயலகங்களுக்குமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரச ஆணையினை அமுல்படுத்த வேண்டிய அவசியத்தினால் ஏற்படுத்தப்படும் இடமாற்றங்களை தங்களது சொந்த நலனுக்காக மக்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றமையை ஊழலுக்கு ஏதிரான போராட்டமாக சித்தரிப்பதும், அரசாங்க ஊழியர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதும் எவ்வகையில் நியாயபூர்வமாதென்பதுடன் இத்தகைய செயற்பாடுகளால் அரச நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.


இது இவ்வாறு இருக்க தற்போதைய நல்லாட்சியின் கீழ் தம் கடமைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அபகீர்த்தியினையும், தவறான கண்ணோட்டத்தினையும் ஏற்படுத்;த முயல்வது மிக முக்கியமாக தடுக்கப்பட வேண்டியதே. இதன்போது கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாகரீகமற்ற பண்பற்ற வார்த்தைகளினால் எம் உத்தியோகத்தர்களின் சுயமரியாதையினை கொச்சைப்படுத்தும் விதமாகப் பிரசுரிக்கப்படுகின்றன.


இத்தகைய பிரசுரிப்புக்கள் தனிமனித சுதந்திரத்திற்கு பெரிதும் பங்கமேற்படுத்துகின்றன. அத்தோடு இவை எவ்வகையிலும்  நியாயப்படுத்தக்கூடியதல்ல. எமது அலுவலர்களின் மீது வீண்பழிகளினால் சுமத்தி மன உளைச்சல்களுக்கு ஆளாக்கி வருவோர் தொடர்பாக எம்மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுகின்றோம். ஆதாரமற்ற தகவல்களை உண்மைக்கு புறம்பாக ஊழல் மோசடிகளாக சித்தரித்து போலி வதந்திகளாக பரப்பி எம்மக்களுக்கிடையே முரண்பாட்டுக்கு வித்திடுவது சட்டத்திற்கு மாறாததாகும். இத்தகைய போலிகள் மீது சமுக நலன்காப்பு மற்றும் தனி மனித சுதந்திர அவமதிப்பினை முன்னுறுத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டியது காலத்தின் தேவையாகும்.


பாராளுமன்ற அரசாங்க கணக்குக் குழுவின் 2015ஆம் வருட தரப்படுத்தலில் 93 புள்ளிகளைப் பெற்று மிக நன்று நிலையினை அடைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திகள், ஒப்பந்த வேலை, நிவாரணம், காணிகள் எனப் பலவாறு போலி வதந்திகள் செய்திகளாக வெளியிடப்படுகின்றன. நாம் எந்தவொரு பிரஜைக்கும் எம் செயலகங்களினூடாக தகவல் அறியும் சட்டத்தினைத் தழுவி உரிய தகவல்களை நேரடியாகவே வழங்க காத்திருக்கும்போது இத்தகைய போலிக்குற்றச்சாட்டுக்கள் அரசினால் ஏற்படுத்தப்படும் இடமாற்றங்களின்போதே இக்குற்றச்சாட்டின் அவசியம் என்ன?

அவ்வாறே அரச அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கருதினால் சம்பந்தப்பட்ட அலுவலர்மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவினூடாக தம்மிடமுள்ள ஆதாரங்களைச் சமர்ப்;பித்து உரிய சட்ட நடவடிக்கையினை எந்தவொரு பிரஜையும் எடுக்கமுடியும். அதனை விடுத்து  பொய்யான தகவல்களை வழங்குவதோடு, ஒரு சில குழுக்களை பகடைக்காய்களாக்கி  ஆர்பாட்டங்களை  நடாத்;துவதில் மக்களுக்கு எவ்வித பிரியோசனமுமில்லை.

எனவே ஒரு சிலரின் சுயலாபங்களுக்கு துணைபோகும் குழுவினரே சற்றுச் சிந்தியுங்கள், உண்மையை உணருங்கள், யதார்த்தத்தைச் புரிந்து கொள்ளுங்கள். என அரச நிருவாக உதியோகத்தர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

- மட்டக்களப்பு மாவட்ட அரச சேவையாளர்கள்.

வீடியோ காணொளி:-

மட்டு அரசாங்க அதிபர் சார்ள்சுக்கு ஆதரவாக திரண்டெழுந்த மட்டு அரச நிருவாக உத்தியோகத்தர்கள். மட்டு அரசாங்க அதிபர் சார்ள்சுக்கு ஆதரவாக திரண்டெழுந்த மட்டு அரச நிருவாக உத்தியோகத்தர்கள். Reviewed by Madawala News on 7/11/2017 08:04:00 PM Rating: 5