Yahya

திடீர் மரணம் அல்லது இளவயது மரணம் .


சராசரியாக எமது தாய் தந்தையர்களின் பெற்றோர் சுமார் 70 தொடக்கம் 90 ஆண்டுகள் வரையும் எமது தந்தையர்கள் 50 தொடக்கம் 60 ஆண்டுகளும் நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்தனர் காலப்போக்கில் இவ்வயதெல்லை குறைவடைந்ததுக்கான காரணம் என்ன? அப்படியானால் எமது ஆரோக்கியத்தின் வயது 40 தொடக்கசம் 50 ஆண்டுகளா?!! இன்னும் கூறப்போனால் எமக்கு கீழ்வரும் சந்ததியினரின் வயது 30 தொடக்கம் 40 ஆண்டுகளா?!!! இதற்கான காரணங்களை விரிவாகப் பார்ப்போம்:

1- தற்போது நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள் 75% வீதமானவை மரபணு முறையில் உற்பத்தி செய்தவையே.  மரபணு என்றால் செயற்கை முறையில் இரசாயனம் மூலக்கூறுகளின் உதவியுடன் பெறப்பற்றவை. எமக்கு முன்னோர் வாழ்ந்தவர்கள் இயற்கை உரத்தில் உற்பத்தி செய்த உணவுகளை மட்டுமே உண்டு நீண்ட காலம் திடகாத்திரமான வாழ்க்கையை வாழ்ந்தனர்.

2- அஜினோமோட்டோ அல்லது இரசாயன சுவையூட்டிகள் இல்லாத சமயலறைகள் எங்கும் இல்லை அத்துடன் உணவங்களில் கிலோக்கணக்கில் அஜினோமோட்டோவை உணவில் கலந்துவிடுகின்றனர் வாயால் விழுங்கும் வரைக்கும்தான் அதன் சுவை அதுக்கு பிறகு அது எமக்கு அது கேடுதான். இவ்வாறு பல நாட்கள் இவ்வகையான உணவுகளை உண்ணும்போது பல உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்து இறுதியில் மரணம் நிகழ்கிறது.

3. சூரியகாந்தி மற்றும் சோலம் போன்ற சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள்: இவை இரண்டும் 100 வீதம் உடம்புக்கு கேடுதான் காரணம் ஒரு  50மில்லி சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி செய்வதுக்க சுமார் 150-200 பூக்கள்சரி தேவை ஆனால் நாம் பாவிக்கும் 1லீட்டர் எண்ணெய் உற்பத்தி செய்ய சுமார் 4000 பூக்களை பெறவேண்டும் இது சாத்தியமான ஒன்றா? கண்டிப்பாக இல்லை இதில் இரசாயன கலவையுடன்தான் சிறிதளவு பூக்களையும் சேர்ந்து சூரியகாந்தி எண்ணெய் என கடைகளில் விற்பனை செய்கின்றனர் இவ்வாறுதான் சோளம் எண்ணெய்யும். ஆகவே எமதூரில் தயாரிக்கப்படும் சுத்தமான தேங்காய் எண்ணெயை மட்டும் உபயோகியுங்கள் இதனால் உடம்புக்கு பலவகையில் நன்மைகள் கிடைக்கின்றது.

4. கால ஓட்டத்தின் வேகத்தில் நாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம் இதனால் உணவுகளை அவசர அவசரமாக விழுங்கி விட்டு நமது அன்றாட பணிகளுக்கு சென்று விடுகிறோம் உணவுகளை மென்று சாப்பிடாமல் விட்டோம் என்றால் அந்த உணவுகள் வயிற்றில் தேங்கிநின்று பலவிதமான கோளாறுகளை வயிற்றில் உண்டாக்கி மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்களுக்குரிய காரணிகளாக அமைகின்றது.

5. உடல்உழைப்பின்மை அதாவது எமது உடலுக்குரிய பயிற்சிகளை தவற விடுகின்றோம். இன்றைய காலகட்டத்தில் ஒரு இடத்தில இருந்தவாறே கணனி, தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன்றவற்றில் எமது அன்றாட வாழ்க்கை யில் 70% விகிதம் சென்றுவிடுகின்றது மிகுதியை தூக்கத்தில் கழிக்கின்றோம். இதனால் உடல் உழைப்பு குறைந்து கொழுப்புக்கள் ஓரே இடத்தில் தாங்கி விடுகின்றன.  முன்னொரு காலத்தில் நோக்ஸ் ரோட்டிலிருந்து அக்கரைச்சேனையில் உள்ள நண்பர் ஒருவரை சந்திக்க செல்லவேண்டு என்றால் துவிச்சக்கர வண்டியில் சென்று சந்திப்போம் இபோது 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெரியபள்ளியில் தொழுகைக்கு செல்வத்துக்கும் மோட்டார் சைக்கிளில்தான் செல்கின்றோம். ஆகவே இங்கே உடலுழைப்பு என்பது வெறும் ஸீரோதான்.

6. அடுத்தது சோசியல் மீடியாக்கள் (facebook, twitter & Whatsapp etc..)இவைகளில் ஈடுபட்டு மற்றவர்களின் பதிவுகளை வாசித்தும் அதுக்கெதிராக கருத்துக்களை எழுதியும் எமது மனஅழுத்தங்களை நாமே அதிகரித்து இறுதியில்  உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இறுதியில் எமது உடலிலுள்ள நோய்களுக்கு நாமே காரணமாகின்றோம்.

7. மொபைல் போன்களை கையில் அதிகளவான நேரம் வைத்து பயன்படுத்தாதீர்கள் இதனால் அதிலுள்ள கதிர்கள் உடலில் சொல்வதானால் எமது உடற்கூறுகளில் பாரிய தாக்கங்களை உண்டுபன்னுகின்றது.

8. மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது சிறுநீர்  மற்றும் இரத்தம் இவைகளை பரிசோதியுங்கள் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் ஆரம்பத்தில் கண்டுபிடித்து நிவாரணம் பெறலாம்.

எமது மரணம் குறித்து இறைவனுக்கு மட்டும்தான்  தெரியும் ஆகவே இறைவனைத் தவிர எவராலும் தடுக்கவோ  அல்லது மாற்றவோ முடியாது ஆனால் இறைவன் எமக்கு கொடுத்த அறிவைக் கொண்டு நல்லமுறையில் வாழ்க்கையை அமைப்போம்.

By :  மூதூர் ரஸ்மி
திடீர் மரணம் அல்லது இளவயது மரணம் . திடீர் மரணம் அல்லது இளவயது மரணம் . Reviewed by Madawala News on 7/14/2017 08:24:00 PM Rating: 5