Yahya

'டெங்கு' எனும் உயிர் கொல்லி? டெங்கில் நமது கவனக்குறைவு.


 மரணம் இறைவன் நாடியபடி ஒரு நிமிடம் முந்தவோ,பிந்தவோ மாட்டாது.பலரது மரணங்கள் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டு எதிர்பார்ப்புகளுடன் நிகழ்வதால் இம்மரணம் குடும்பங்களில் பெரிதளவு தாக்கம் செலுத்துவதில்லை.டெங்கினால் ஏற்படுகின்ற மரணம் என்பது பாதையோரமாக செல்கின்ற ஒருவரை வீதி வழியே செல்லும் வாகனம் மோதி மரணிப்பதற்கு ஒத்ததாகும்.

இதனாலேயே டெங்கு காய்ச்சலினால் ஏற்படுகின்ற மரணம் பலரது மனங்களை மிகவும் பாதிப்படைய செய்கிறது.இது வயது வேறுபாடின்றி எல்ல வயதுடையவர்களையும் பாதிக்கிறது.குறிப்பாக எம்முடன் கொஞ்சி விளையாடுகின்ற குழந்தை செல்வங்களின் மரணம் குடும்பத்திலே நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் இவ்வருடத்தில் ஜூன் மாதம் வரைக்கும் மொத்தம் 80203 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் 225 பேர் உயிர் இழந்துள்ளார்கள்.

Distribution of Notification(H399) Dengue Cases by Month
January 10927
February 8722
March 13539
April 12498
May 15208
June 19309
July
TOTAL 80203

டெங்கு சம்பந்தமாக இக்காலங்களில் பல ஆக்கங்கள் சமூக வலைத்தளங்களில் காணலாம்.வழமையான விடயங்களை விட நடைமுறையில் டெங்கு சம்பந்தமான சில விடயங்களை எழுதுகிறேன்.

டெங்கு நுளம்பு கடித்து 4-10 நாட்களில் அறிகுறி தோன்ற ஆரம்பிக்கும்.ஏறத்தாழ 2-7 நாட்களுக்கு அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும்.சாதாரண நாட்களில் காய்ச்சல் ஏற்படுகின்ற போது வேறு எந்த Symptoms இல்லையென்றால் Paracetamol tablet ஐ அளவிற்கேற்ப ஆறு மணித்தியாலங்களுக்கோரு முறை வைத்திய ஆலோசனையின்றி முதலாவது நாள் மட்டும் பாவிக்கலாம்.ஆனால் இப்போதைய கால பகுதியில் நாட்டில் பரவலாக டெங்கின் தாக்கம் பரவலாக உள்ளதால் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே வைத்திய ஆலோசனை பெறுவது சிறந்தது.


காய்ச்சல் என்பது ஒரு வருத்தமல்ல.அது ஒரு நோயின் அறிகுறிகளில் இதுவும் ஒன்று.ஒவ்வெருவருக்கும் காய்ச்சலின் தன்மை வித்தியாசமானதாக உணரப்படும்.இதனால் பலர் சாதாரண சூடு தானே என சொல்லி வீட்டிலே இருந்து விடுவார்கள.பிறகு வருத்ததின் உச்ச கட்ட நிலையிலே வைத்தியசாலையில் அணுமதிக்கப்படுகிறது.இதிலும் குறிப்பாக எமது முஸ்லிம் சமூகம் வைத்தியசாலையில் அனுமதிப்பதென்றால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.மற்றைய நோய்களுக்கு Private Clinic இல் மருந்து எடுப்பது போன்று டெங்கு காய்ச்சலுக்கும் வைத்திய ஆலோசனையை பொறுப்படுத்தாது இவ்வாறு செய்து இறுதி நேரத்தில் Seriousஆக வைத்தியசாலையில் அணுமதிப்பதாலே அனேகமான மரணங்கள் நிகழ்கிறது.

டெங்கு காய்ச்சலில் குறிப்பிட்ட 24-48 மணித்தியாலங்கள் இருக்கிறது.இது Plasma Leakage Period எனப்படும்.இந்த காலப்பகுதியிலே கூடுதலான மரணங்கள் ஏற்படுகிறது.இதன்போது இந்த வைரசின் தாக்கத்தால் இரத்த குழாயின் சுவரில் திரவம் வெளியேறும் தன்மை அதிகரிக்கப்பட்டு (Increased Vascular Permeability) வெளியே திரவம் குவிக்கப்படுகிறது(Fluid Accumulation).பல உள்உறுப்புகளிலும் இத்திரவம் ஒன்று சேர்வதால் பல வகை உறுப்புக்களும் செயலிழந்துவிடும்(Multi Organ Failure).இதிலும் குறிப்பாக சுவாசப்பையில் ஏற்படும்போது மூச்சு தின்றல் ஏற்பட்டு(Respiratory Distress)மரணம் ஏற்படுகிறது.
இந்த ஆபத்தான காலத்தை வைத்தியசாலையில் அணுமதிப்பதன் மூலமாக மட்டுமே அறிந்து கொள்ளலாம்.

இக்காலப்பகுதியில் நோயாளிகளால் வைத்திய ஆலோசனைப்படி குடிக்கும் திரவங்களின் அளவு(Intake Fluid Volume),சிறுநீரின் அளவு(Urine Output Volume) போன்றவற்றை சரியான முறையில் அளக்க உதவ வேண்டும்.இவையும் Danger Periodஐ அறிந்து கொள்ள உதவும்.


அடிக்கடி இரத்த பரிசோதனை செய்ய வேண்டிவரும்.இதன்போது சில நோயாளிகள் குறிப்பாக சிறுவர் விடுதியில்(Children Ward)பெற்றோர்கள் இரத்தம் எடுத்து எடுத்து பிள்ளையின் இரத்தமெல்லாம் முடிந்துவிட்டது என தாதி உத்தியோகத்தர்களிடம்(Nursing Officer)முரன்படுகின்றவர்களும் நம் சமூகத்தில் அனேகமானோர் இருக்கிறார்கள்.மற்றைய நோயை விட டெங்கு நோயின் சிகிச்சையில் நோயாளி,அவருடன் கூட இருப்பவர்களுக்கு(Bystander) கனிசமான பங்கு இருக்கிறது.இதன்மூலம் ஆரம்பத்திலே ஆபத்தான அறிகுறிகள் கண்டறிவதன் மூலம் இறப்புவீதம்(Mortality Rate) குறைக்கப்படுகிறது.

உண்மையில் டெங்கு நோயாளி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மிக தீவிரமாக கண்கானிக்கப்பட வேண்டும்.

நாட்டின் சில பகுதிகளில் டெங்குக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவுகள்(Dengue High Dependent Unit)ஆரம்பிக்கப்பட்டு டெங்கு நோயாளிகள் மிக தீவிரமாக ஒவ்வெரு நிமிடமும் விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட வைத்திய குழுவினால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.இதனால் டெங்கு நோயினால் ஏற்படுத்தப்படுகின்ற இறப்பு வீதம் மிக குறைவு(Mortality Rate)


டெங்கு வைரஸ் அவற்றின் பிறபொருள்(Antigen)அடிப்படையில் நான்கு வகை உண்டு.இப்பொழுது ஒருவகை Antigenயின் தாக்கமென்றால் அடுத்த முறை இன்னொரு Antigenயின் தாக்கம் இருக்கும்.இதன்போது இப்போது ஏற்பட்ட Antigenஇற்கு எதிராக உடம்பினால் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு கலங்கள்(Antibodies) மீண்டுமொரு தடவை மற்றுமொரு Antigenயினால் டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது Antigen,Antibody இடையே உக்கிர தாக்கம் நடைபெறுவதால் இதனால் உயிரிழப்பு மிக கூடுதலாக இருக்கும்.

டெங்கு வைரசின் தாக்கத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது
--------------------------------------
டெங்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்டு ஆரம்ப நாற்களில் இரத்த பரிசோதனையில்  (FBC-Full Blood Count) பல வேலை குருதி சிறுதட்டு எண்ணிக்கை(Platelets Count),வெண்குருதி கலங்கள்(Total WBC count) சராசரி நிலையில்(Normal Range)இருக்கலாம்.

இதன்போது வைத்தியரால் மேற்படி பரிசோதனையை மறு நாள் மீள செய்ய (Repeat FBC)வலியுறுத்தப்படும்.ஆனால் பல நோயாளிகள் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுவதில்லை.ஒருதடவை இரத்த பரிசோதனையில் அவர்களாகவே முடிவெடுத்துவிடுவார்கள் இது டெங்கு அல்ல சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பார்கள்.பலருக்கு மூன்று,நான்கு தடவைகள் இரத்த பரிசோதனை செய்து அவை சாதாரண வைரஸ் காய்ச்சலாக அறிக்கை இருந்து நான்கு,ஐந்தாவது பரிசோதனையில் டெங்காக இருக்கும்.


எனவே தயவு செய்து இக்காலங்களில் வைத்திய ஆலோசனையை முழுமையாக பின்பற்றுங்கள். டெங்கு அறிகுறிகள்(Symptoms) வெளியாகி வீட்டில் பரசிட்டமோல் பல நாள்களுக்கு கொடுத்து விட்டு பிந்திய வைத்தியசாலை அணுமதியினாலே(late Presentation)அனேகமான மரணங்கள் நிகழ்கிறது.இதிலே குறிப்பாக வீட்டில் பலர்கள் தற்காலிக வைத்தியர்களாக மாறி வைத்தியசாலை அணுமதியை தடுப்பார்கள்.


பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டு இரத்த பரிசோதனை(Full Blood Count) செய்கின்ற போது குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை(Total Platelets) 150,000 வை விட குறைவதுடன் அனேகமாக மொத்த வெண்குருதி கலங்களின் அளவு(Total White Blood Cell) 4,000ஐ விட குறைகின்ற போது டெங்காக அடையாளப்படுத்தப்படுகிறது.இதையே மாற்றம் டெங்கு அல்லாத வேறு வைரஸாலும் ஏற்படலாம்.டெங்கினால் ஏற்படுத்தப்படுகின்ற நோய் அறிகுறிகள்(Symptoms),வைத்திய சோதனையின்போது வெளிக்கொணரப்படும் குனம் குறிகள்(Signs) என்பவற்றை வைத்து டெங்கு காய்ச்சலை சொல்ல முடியும்.

இருந்த போதும் டெங்கு காய்ச்சலை உறுதியாக சொல்வதற்கு

  1)டெங்கிற்குறிய பிற பொருள் பரிசோதனை(Dengue Antigen Test)
  2)டெங்கு பிற பொருள் எதிரி பரிசோதனை(Dengue Antibody Test)

போன்ற பரிசோதனைகளாகும்.இவை பெரும்பாலான வைத்தியசாலைகளில் இச்சோதனைகள் செய்வதற்குறிய போதிய வசதிகள் இல்லை.இது கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையம்(MRI-Medical Research Institute) மூலமும் இலவசமாக செய்ய முடியும்.இவை பெரும்பாலும் தனியார் பரிசோதனை கூடங்களிலே செய்யப்படுகிறது.இவை சற்று விலை உயர்ந்த பரிசோதனைகளாகும்.ஏறத்தாழ ஒவ்வொன்றும் 1300 தொடக்கம் 2000 ரூபா வரை செலவாகும்.

1)டெங்கிற்குறிய பிற பொருள் பரிசோதனை (Dengue Antigen Test)
 ------------------------------------
டெங்கு வைரஸ் தாக்கியவுடன் டெங்கிற்குறிய பிறபொருள் NS1 இரத்ததில் காணப்படும்.அறிகுறிகள் ஏற்பட்டு முதல் இரண்டு நாள்களில் இச்சோதனை செய்கின்ற போது இதன் வினைத்திறன்(Sensitivity)மிக கூடுதலாக
இருக்கும்.ஆரம்பத்தில் டெங்குதான் என அறியப்படுமிடத்து மிகவும் அவதானமாக  இருப்பதோடு இதற்குறிய முறையான சிகிச்சை பெற்று கொள்வதன் மூலம் இறப்பு வீதத்தை(Mortality Rate) மிகவும் குறைக்க முடியும்.


கல்வி அறிவில் நமது நாடு முன்னேறியதாக இருந்தாலும் பல நோயாளிகளால் முறையான நோய் அறிகுறிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சொல்வதில்லை(Proper History).வைத்தியரிடம் நோய்க்குறிய மாறுபட்ட Historyஐ சொல்வதன் மூலம் இப்பரிசோதனையானது உரிய நேரத்தில் செய்யப்படாதவிடுத்து உண்மையான டெங்கு தாக்கம் இருந்தும் இதனுடைய பெறுபேறு சில வேலை டெங்கு இல்லையென்று காட்டலாம்.

2)டெங்கு பிறபொருள் எதிரி பரிசோதனை(Dengue Antibody Test)
--------------------------------------
டெங்கு வைரஸ் நான்கு வகையாக அவற்றின் பிறபொருள் அடிப்படையில் பிரிக்கப்படும்.ஒருதடவை ஒரு வகையான பிற பொருளால் தாக்கம் ஏற்படுத்தப்படும் போது அதற்கு எதிராக மனிதனில் நிர்ப்பீடன தொகுதியால்(Immuneo System)உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள்(Antibodies) வாழ் நாள் பூராகவும் அவனது இரத்திலே இருக்கும்.இது இதன்பிறகு இவ்வகை டெங்கிற்கு எதிராக வாழ் நாள் பூராகவும் தாக்குதல் நடத்தும்.எனவே ஒரு மனிதனின் அவனது வாழ்க்கை காலத்தில்(Life time)ஆகக்கூடுதலாக நான்கு தடவைகள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகலாம்.

டெங்கு தாக்கி முதலாவது வாரத்தின் மூன்றாவது,நான்காவது நாற்களிள் முதன்மையான பிறபொருளெதிரி(IgM) இரத்ததில் அதிகரிக்க தொடங்கும்.இரண்டாவது வார முடிவில் இதன் அளவு குறைய தொடங்கும்.
இது போல டெங்கிற்குறிய நிரந்தர பிறபொருளெதிரி(IgG) முதலாவது வாரத்தின் மூன்றாவது,நான்காவது நாற்களில் தொடங்கி வாழ் நாள் பூராகவும் இரத்திலே இருக்கும்.எனவே இப்போது நீங்கள் சுகதேகியாக இருந்தாலும் இப்பரிசோதனை செய்யும்போது உங்கள் வாழ்நாளில் எப்போதாவது டெங்கு ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிய முடியும்.


டெங்கு சம்பந்தமான போலியான செய்திகள்
--------------------------------------
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் டெங்கு சம்பந்தமாக பல மருந்துகளின் பெயர்கள்,பப்பாசி சாறு இவை பாவித்தால் வைத்தியசாலையில் அணுமதிக்க தேவையில்லை ஓரிரு நாற்களில் குணமாகிவிடும் என செய்திகள் வலம்வருகிறது.இவை யாவும் முறையான ஆதாரமற்ற செய்திகளாகும்.தயவு செய்து இவ்வாரான செய்திகளை பரப்புவதன் ஓர் உயிரிழப்புக்கு நீங்களும் பங்குதாரராகிவிடுவீர்கள்.
டெங்கிற்குறிய விஷேட மருந்து  இதுவரை உலகத்தில் எங்கேயும் பாவணையில் இல்லை/கண்டுபிடிக்கப்படவில்லை.வைத்திய ஆலோசனைப்படி வைத்தியசாலையில் உரிய நேரத்தில் அணுமதிக்க  வேண்டும்.அது எந்தவொரு விஷேட வைத்தியருக்கோ அல்லது அவரது உறவினர்களென்றாலும் டெங்கு தாக்கம் இவர்களுக்கு ஏற்பட்டாலும் ஒரு நிலையில் வைத்தியசாலை அணுமதி அவசியமாகும்.ஏனெனில் டெங்கினுடைய Danger Period  வைத்தியசாலையில் நெருங்கிய அவதானிப்பு(Close Observation) மூலமே இனம் காணப்படும்.இதனால் இறப்பு வீதத்தை குறைக்கலாம்.

டெங்கிற்கு விஷேட மருந்து இல்லாத போதும் சில நாடுகளில் டெங்கு வராமல் தடுப்பதற்காக முன்கூட்டியே தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன(Dengue Vaccine)

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar
'டெங்கு' எனும் உயிர் கொல்லி? டெங்கில் நமது கவனக்குறைவு. 'டெங்கு' எனும் உயிர் கொல்லி?  டெங்கில் நமது கவனக்குறைவு. Reviewed by Madawala News on 7/09/2017 09:57:00 AM Rating: 5