Yahya

தலைக்கேறிய போதை. தன்நிலை மறந்த மெதிரிகிரிய மாணவர்கள். ( பிரதேச ரிப்போர்ட்டர் விசேட கட்டுரை)


-ஆரிப் S நளீம்-

போதைக்கு அடிமையான மெதிரிகிரிய பாடசாலை மாணவர்கள் 41 பேர் தம் கைகளை தாமே அறுத்துக்கொண்டதாகவும்  இதன் காரணமாக குறித்த மாணவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின்  பின் தம் பெற்றோர்களுடன்  வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.இதில் ஒரு மாணவியும் அடங்கும்.

தீங்குகளை பெருகச்செய்கிற சமூக நடத்தைகளிலும் ஒழுக்க நெறிமுறைகளிலும் படு மோசமான பிறழ்வுகளை ஏற்படுத்துகிற சமய தத்துவ மருத்துவ ஆரோக்கிய துறைகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிற.மதுபோதை பாவனையிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது மெல்லக் கொல்லும் நச்சுப்பாணமாகும்.

மதுபான பாவனை மூளையை இழக்கச்செய்து விடும்.

முன்னாள் பிரேஞ்சு ஜனாதிபதி ஒரு முறை தம் நாட்டு மாணவர்களை பார்த்து இப்படிச்சொன்னார்.

இளைஞர்களே உங்களின் மிகப்பெரிய எதிரி மதுபானமாகும் இனிமேல் அயல் நாடுகளுடன் சண்டை இடாதீர்கள் மதுபானத்துக்கு எதிராக ஆயுதங்களை தூக்குங்கள்.

மது பானம் ஒரு உயிர் கொல்லி நச்சு பானமாகும் அது உங்களை இளவயதிலேயே கிழடு தட்டச் செய்வதுடன் உங்களின் ஆயுள் காலத்தில் அரைவாசிப் பகுதியை பறித்துக் கொள்ளவும் செய்கிறது மேலும் அது பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும் விதத்தில் உங்கள் உடலை நலிவுறச் செய்வதுடன் அனைத்து பலவீனங்களையும் உண்டாக்கி விடுகிறது.

மாணவர்களுக்கிடையே காணப்படும் மிதமிஞ்சிய பணப்புழக்கமும் மது மீதான வேட்கைக்கு ஒரு காரணமாகும்.

நான் பாடசாலைக்கு செல்லுகையில்  எனக்கான காலை உணவு இரண்டு வாட்டு ரொட்டியும் பிளேண்டியுமாகும்.பாடசாலை விட்டு வீடு வந்ததும் சோற்றில் வடித்த நீரில் சீனி கலந்து ஆச்சி தரும் ஒரு வித பானம்(கஞ்சி) அன்று இரவு உணவு உண்ணும் வரை போதுமானதாகும்.கைச்செலவுக்காக ஆறு ரூபாய் அது  இரு ரொட்டியும் ஒரு வடையும் வாங்க போதுமானதாகும்.அதற்க்கு மேல் பணம் வழங்கப்பட மாட்டாது வழங்கவும் ஆச்சியிடம் பணம் இருக்கவில்லை.

இன்று அப்படியல்ல.தந்தை வெளிநாட்டில் பணி பார்க்கிறார்,நல்ல சம்பளம்,பிள்ளைகளுக்காகத்தானே என தாராளமாக பணம் வழங்கப்படுகிறது.போதாக்குறைக்கு நவீன கைபேசிகள் மோட்டார்சைக்கல்,வீட்டில் அறுசுவை உணவும் செலவுக்கு பெருந்தொகை பணமும் வழங்கப்படுகிறது.அது தவிற அவர்களுக்கு தம் பெற்றவர்களால் வழங்கப்பட்டிருக்கும் அதீத தெரிவுச்சுதந்திரம் மாணவர்களை தொட்டாச்சிணிங்கி குணவியல்புடையவர்களாக மாற்றிவிடுகிறது. இதனால்  அவர்களுக்கு கண்மூக்கு தெரிவதில்லை.போகும் வழி எது என புரிவதில்லை.

மாணவர்களுக்கு அறநெறிகளை போதிக்க  தவறிவிட்ட சமூக,மத தலைமைகள் அதற்க்கு பதிலாக இன வாதத்தை குரோதத்தை,சந்தேகத்தை தப்பெண்ணத்தை தவறாது போதிக்கின்றனர்.அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.

தங்களை கற்றறிந்தோர் என அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் சில்லரை பிரச்சினைகளை பெரிது படுத்தி பூதாகரமாக்கிவிடுகின்றனர்.இன்னும் சிலரோ பாலியலை,ஓரினசேர்க்கையை சட்டமாக்கவேண்டும் என பெரும் பாடுபடுகின்றனர் அதற்க்காக தங்கள் காலங்களை நேரங்களை செலவிடுகின்றனர்.அரசு பாலியல் தொழிலை சட்டபூர்மவாக அங்கிகரித்து அத்தொழிலில் ஈடுபடுவோருக்கு ஏதுவாக சட்ட வரைபுகளை வரைய வேண்டும் எனவும் அறைகூவல் விடுக்கின்றனர்.இது பெரும் வேடிக்கைக்குறியதாகும்.

மாணவர்கள் வழிதவறிவிட்டார்கள் என அவர்கள் மீது விரலை நீட்டுகிறபோது.மற்றய நான்கு விரல்களும். பெற்றவர்களை, நாட்டின் அரசியல் தலைமைகளை, மார்க போதகர்களை,கற்பிக்கும் ஆசான்களை காட்டுகிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மையாகும்.
தலைக்கேறிய போதை. தன்நிலை மறந்த மெதிரிகிரிய மாணவர்கள். ( பிரதேச ரிப்போர்ட்டர் விசேட கட்டுரை) தலைக்கேறிய போதை. தன்நிலை மறந்த மெதிரிகிரிய மாணவர்கள். ( பிரதேச ரிப்போர்ட்டர் விசேட கட்டுரை) Reviewed by Madawala News on 7/14/2017 08:08:00 PM Rating: 5