Ad Space avaiable

ஜனாஸா அறிவித்தல்: அக்குரணை பவ்ஸான் கொழும்பில் வபாத்தானார்.


அக்குரணை அலியத்தென்ன, பங்ககொல்லாமடயை வசிப்பிடமாகவும் கொழும்பு இரண்டாம் குறுக்குத்தெருவில் பொம்பே ஸ்வீட் வர்த்தக நிறுவனத்தை இணைந்து நடாத்தி வந்தவருமான பவ்ஸான் ( வயது 39) கொழும்பில் வபாத்தானார்.

 இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 இன்று ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

 அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9:30 மணியளவில் பங்ககொல்லாமட ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

 தகவல்: முகம்மத் ரிசான்
ஜனாஸா அறிவித்தல்: அக்குரணை பவ்ஸான் கொழும்பில் வபாத்தானார். ஜனாஸா அறிவித்தல்: அக்குரணை பவ்ஸான் கொழும்பில் வபாத்தானார். Reviewed by Madawala News on 7/24/2017 07:26:00 PM Rating: 5