Kidny

Kidny

ஓட்டமாவடியில் கற்பாறையை உடைக்க வைத்த கல் வெடிலால் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் பாதிப்பு.


ஓட்டமாவடியில் கிணறு அமைக்கும் நோக்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் பாதிப்பிற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தியாவட்டவான் பகுதியில் தனியார் காணி ஒன்றுக்குள் நேற்று மாலை கிணறு அமைக்கும் நோக்கில் குழி வெட்டிய போது அதனுள் காணப்பட்ட கற்பாறையை உடைப்பதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பத்து வீடுகளின் ஓடுகள் மற்றும் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், வீடுகளில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் பாதிப்பிற்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, கற்பாறைகளை உடைப்பதற்கு வெடிகுண்டு வைக்கவுள்ள விடயம் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் கற்பாறையை உடைக்க வைத்த கல் வெடிலால் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் பாதிப்பு. ஓட்டமாவடியில் கற்பாறையை உடைக்க வைத்த கல் வெடிலால் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் பாதிப்பு. Reviewed by Madawala News on 7/05/2017 12:12:00 PM Rating: 5