Kidny

Kidny

யுவ­தியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய பின் 18 இலட்சம் ரூபா பணம், வீடு வழங்­கி­ய காலி மாவட்ட DIG . யுவதி பரபரப்பு வாக்குமூலம்.


காலி மாவட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா  அதிபர் ஒரு­வ­ரினால் தான் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளா­ன­தாக தெரி­வித்து, அவ­ருக்கு எதி­ராக  கடந்த 15 ஆம் திகதி 26 வய­தான பெண் ஒருவர் காலி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.  

குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள பொலிஸ் அதி­காரி காலி பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக இருந்த காலப்­ப­கு­தியில் 2006 ஆம்  ஆண்டின் இறு­தியில் பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இடம்­பெற்ற நிவர்த்தி பூஜையில் கலந்து கொள்­வ­தற்­காக தனது தாய், தந்தை மற்றும் சகோ­த­ரர்கள் இரு­வ­ருடன் சென்று, அன்­றைய தினம் வழி­பா­டு­களில் கலந்து கொண்டு குறித்த இல்­லத்தின் இரண்­டா­வது மாடியில் உறங்­கி­ய­தா­கவும் அதி­கா­லையில் திடீ­ரென தனது தாய் தன்னை எழுப்பி பார்த்­த­போது தனது ஆடையில் இரத்தம் படிந்­தி­ருந்­த­தா­கவும் முறைப்­பாட்­டா­ள­ரான பெண் தெரி­வித்­துள்ளார்.

அதன்­பின்னர், தான் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை ஊகித்துக் கொண்ட தனது தாய் குழப்­ப­ம­டைந்து இது­தொ­டர்பில் உண்­மையை கண்­ட­றிய முற்­பட்­ட­போது, அவ்­வி­டத்­துக்கு வந்த குறித்த பொலிஸ் அதி­காரி இது தொடர்­பாக வெளியில் எவ­ரி­டமும் தெரி­விக்க வேண்டாம் எனக் கூறி 18 இலட்சம் ரூபா பணத்தை தமது கணக்கில் வைப்பு செய்­த­துடன் கோனப்­பி­னு­வல பிர­தே­சத்தில் வீடொன்­றையும் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

சம்­ப­வத்தின் பின்னர், தாம் சந்­தேக நப­ரான பொலிஸ் அதி­காரி வழங்­கிய வீட்­டி­லேயே வசித்து வந்­தி­ருந்த நிலையில், தற்­போது குறித்த பொலிஸ் அதி­காரி,  தனக்கு வழங்­கிய வீட்டை மீண்டும் திருப்­பித்­த­ரு­மாறு தொடர்ந்தும் மிரட்டல் விடுப்­பதன் கார­ண­மா­கவே வேறு­வ­ழி­யின்றி இச்­சம்­பவம் தொடர்பில் முறைப்­பாட்டை மேற்­கொள்­வ­தாக அப்பெண் தெரி­வித்­துள்ளார்.

மேற்­கு­றித்த சம்­பவம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் அப்­ பெண்­ணுக்கு 15 வயது எனவும் தற்­போது அவர் வெளி­வாரிப் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் முறைப்­பாட்டில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள பொலிஸ் அதி­காரி தற்­போது ஓய்வு பெற்­றுள்­ள­தா­கவும் 11 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முறைப்­பாடு தொடர்பில் காலி பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வ­ருவர் எனவும் அவ­சியம் கருதி இதனை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் காலி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதன்மூலம் கிடைக்கும் தீர்ப்புக்கமைய அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தகவல்: ரெ.கிறிஷ்­ணகாந் - மேட்ரோநிவ்ஸ் 
யுவ­தியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய பின் 18 இலட்சம் ரூபா பணம், வீடு வழங்­கி­ய காலி மாவட்ட DIG . யுவதி பரபரப்பு வாக்குமூலம். யுவ­தியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய பின் 18 இலட்சம் ரூபா பணம், வீடு வழங்­கி­ய காலி மாவட்ட DIG . யுவதி பரபரப்பு வாக்குமூலம். Reviewed by Madawala News on 7/17/2017 11:26:00 AM Rating: 5