Ad Space avaiable

கிந்தோட்டை கா/ ஸாஹிரா தேசிய பாடசாலையில் அடிக்கல் நட்டு விழா.


தென்னிலங்கையின்   முன்னணி முஸ்லிம்  பாடசாலையான காலி, கிந்தோட்டை  கா/ ஸாஹிரா  தேசிய பாடசாலைக்கு கல்வியமைச்சின் "அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை " செயற்றிட்டத்தின்அடிப்படையில் தொழிநுட்பம், உளவளத்துணை பிரிவுக்கான இரு மாடிக் கட்டிடம் மற்றும் தொழிநுட்ப ஆய்வு கூடம், நூலகம் என்பனவற்றுக்கான இரு மாடிக் கட்டிடம் காலி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் மற்றும் அமைச்சர்களான விஜய்பால ஹெட்டியாராச்சி, மனுஷ நாணயக்கார, வஜிர அபேயவர்தன உள்ளிட்ட பிரமுகர்களின் பங்குபற்றலுடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்    வஜிர அபேயவர்தனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

  இவ்வைபவமானது பாடசாலை  அதிபர் M. நஸார்  அவர்களின் தலைமையில்  இடம்பெற்றதோடு இதில்  கா/ ஸாஹிரா  தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான Old Gintota Zahirians   நிறுவனத்தின்
   உறுப்பினர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டமை  குறிப்பிடத்தக்கது.
தகவல்  
ஊடகப் பிரிவு
Old Gintota Zahirians.

கிந்தோட்டை கா/ ஸாஹிரா தேசிய பாடசாலையில் அடிக்கல் நட்டு விழா. கிந்தோட்டை கா/ ஸாஹிரா தேசிய பாடசாலையில் அடிக்கல் நட்டு விழா. Reviewed by Madawala News on 7/10/2017 11:38:00 AM Rating: 5