Kidny

Kidny

குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயர் சூட்டிய பெற்றோர்.


இந்தியாவில்  ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட சமயத்தில் ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயரிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே வரி என்பதை வலியுறுத்தும் வகையில், சமீபத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது.

இதற்காக, புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 30-ஆம் தேதி நள்ளிரவு நடந்த சிறப்பு கூட்டத்தில் பாஜக அரசு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பீவா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜூன் 30 நள்ளிரவு சரியாக 12.02 மணிக்கு குழந்தை பிறந்தது. அதைதொடர்ந்து அந்த குழந்தையின் பெற்றோர், ஜி.எஸ்.டி வரி அறிமுக நேரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயரிட்டு அழைத்தனர்.

குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயர் வைத்ததை அறிந்த ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, தனது டுவிட்டர் பதிவில், ’’ஜி.எஸ்.டி குழந்தைக்கு வாழ்த்துக்கள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ்.டி வரி தாக்கத்தில் இருந்து வரும் நிலையில், ஜி.எஸ்.டி என பெயரிடப்பட்ட குழந்தையை அப்பகுதி மக்கள் அனைவரும் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயர் சூட்டிய பெற்றோர். குழந்தைக்கு ஜி.எஸ்.டி என பெயர் சூட்டிய பெற்றோர். Reviewed by Madawala News on 7/03/2017 08:43:00 AM Rating: 5