Ad Space Available here

கண்டி வைத்தியசாலையில் வரலாற்று சாதனையாக நிகழ்த்தபட்ட இருதய மாற்று சிகிச்சை... படங்களுடன் ஒரு விரிவான பார்வை.


- ஜே.எம். ஹபீஸ்-

இலங்கை வரலாற்றில் வைத்தியத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய ஒரு சாதனையாக கண்டி வைத்திய சாலையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிட்சையை எடுத்துக் கொள்ளமுடியும் என கண்டி வைத்திய சாலைப் பணிபபாளர் டாக்டர் சமன் ரத்நாயக்கா தெரிவித்தார்.(10.7.2017)

அவர் மேலும் மூறுகையில் -

ஒருவரின் இருதயத்தை முற்றாக அகற்றி மற்றொருவருக்குப் பொருத்துவது என்பது சாதாரண ஒரு செயல் அல்ல. பொதுவாக இருதயத்தில் தமனழ அடைப்புக்களுக்கு மாற்று வழி ஒன்றை (பைபாஸ் சிகிட்சை) பெரிதாகக் கருதும் இக்காலத்தில் முற்றாக இறுதயத்தை மற்றொருவருக்கு பொருத்துவது இமாலய சாதனையாகும்.

இதற்காக பல்துறைகளையும் சார்ந்த 20 வைத்திய நிபுணர்களின் குழுவின் சேவை பெறப்பட்டது.

ஏழு மணித்தியாலய போராட்டத்தின் பின்னே முடிவு கிடைத்தது. கண்டி வைத்திய சாலையில் இறுதய கோளாருகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றனர். இருப்பினும் ஒரு விபத்தில் காயமடைந்த 22 வயதுடைய கண்டிப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீப் சம்பத் என்பவரின் மூளை செயலிழந்தது உறுதியான நிலையிலே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 அவருக்கு யந்திரம் ஊடாக இருதயத்தை இயக்கிய போதும் அவரால் மூச்சு விட முடியாத நிலை காணப்பட்டது இதனால் அதைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

அதேநேரம் கண்டியில் சிகி;சை பெற்று வந்த அனுராதபுரப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒரு பெண்ணின் இதயம் 12 சதவீத்திலும் குறைவாகவே செயற்பட்டது. அதாவது88 சதவீத்திற்கு மேல் அது செயல் இழந்துள்ளமை தெளிவானது. இது தொடாபாக இவருக்கு இறுதய மாற்று மேற்கொள்ளப்பட வேண்டும் என என்னிடம் சிபாரிசு கேட்கப்பட்டிருந்தது.


மறு புறமாக காயமடைந்த இளைஞனின் உறவினர்கள் அவரது உறுப்புக்களை தானம் செய்ய முள்வந்தனர். இதன் காரணமாக மேற்படி பெண்ணுக்கு காயமடைந்துள்ள இளைஞனின் இதயத்தை பொருத் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதே நேரம் அவ் இளைஞனின் சிறு நீரகம் உற்பட மற்றைய பகுதிகளையும் பிரிதொருவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


ஏராளமானவர்கள் இருதய சத்திர சிகிட்சைக்காக காத்திருந்த போதும் மேற்படி பெண்ணை நாம் அதற்காகத் தெரிவு செய்தோம்.

இச்சத்திர சிகிட்சைக்கு கண்டி, பேராதனை போதனா வைத்திய சாலை, பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் வைத்திய சாலை, வெலிசர வைத்திய சாலை, லேடி (அம்மையார்) ரிஜ்வே வைத்திய வைத்திய சாலை உற்பட பல வைத்திய சாலைகளைச் சேர்ந்த ஒரு குலாமே பங்குகொண்டது குறிப்பிடத்தக்கது.


கடந்த 7ம் திகதி இரவு 8 மணிக்கு இம் முயற்சியில் இறங்கினோம். மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு சத்திர சிகிட்சை முற்றுப் பெற்றது. இது தனி முயற்சி ஒன்றல்ல. துறைசார்ந்த பலரினது பங்களிப்பு மட்டுமல்ல பல்துறைகளும் இணைந்தன. அதாவது இருதய சத்திர சிகிட்சைப்பிரிவு, நினைவிழக்கச் செய்யும் பிரிவு, குரு தரம்பிரிக்கும் பிரிவு, வைரஸ் தொற்று பாதுகாப்புப் பிரிவு, மூளை நரம்பியல் பிரிவு, சட்டவைத்தியப் பிரிவு உற்பட பல்வேறு பிரிவுகள் போன்றன பங்களிப்புச் செய்தன என்றார்.


வைத்திய குழுவையும் பங்களிப்புச் செய்தவர்களையும் படத்தில் காணலாம். இங்கு வைத்திய நிபுணர்கள் பலர் கருத்து வெளியிட்டனர்.


 
கண்டி வைத்தியசாலையில் வரலாற்று சாதனையாக நிகழ்த்தபட்ட இருதய மாற்று சிகிச்சை... படங்களுடன் ஒரு விரிவான பார்வை. கண்டி வைத்தியசாலையில் வரலாற்று சாதனையாக நிகழ்த்தபட்ட இருதய மாற்று சிகிச்சை... படங்களுடன் ஒரு விரிவான பார்வை. Reviewed by Madawala News on 7/11/2017 01:53:00 PM Rating: 5