Ad Space avaiable

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு.


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்கான சொற்பொழிவு, 1ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு 'குடும்ப பிரச்சினைகளும் உளவியல் தலையீடும்' எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.

77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, பிரபல உளவள ஆலோசகரும், உளவளத்துறை விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் லுக்மானுல் ஹகீம் நளீமி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, ,இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புகளுக்கு: 0766529128
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்த விஷேட சொற்பொழிவு. Reviewed by Madawala News on 7/31/2017 07:09:00 PM Rating: 5