Ad Space avaiable

அவசரமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. (சமீபத்தில் ஜனாசா அடக்கம் செய்வதில் ஏற்பட்ட அசௌகரியங்கள்)


கடந்த மாதம் எனக்கேற்பட்ட அனுபவம் மற்றும் கடந்த ஒரு மாதத்திற்குள் ஜனாசா அடக்கம் செய்வதில் ஊரிலும் வெளியிலும் ஏற்பட்ட அசௌகரியங்களின் விளைவாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக .....

வீட்டில் ஒருவர் மரணித்துவிட்டால் உடனே உங்கள் ஏரியா கிராம அதிகாரிக்கு அறிவித்தல் கொடுத்து அவர் வந்து பார்க்கும்வரை ஜனாசாவை அப்படியே வைத்திருங்கள்.

மேலும் கிராம அதிகாரி அல்லது பிரேத பரிசோதகரின் அறிவுரைக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்குங்கள்.

இதல்லாமல் நாம் சுயமாக மரணம் சம்பவித்ததும் ஜனாசாவை அடக்க முன்னெடுப்புகளை செய்யும்போது அநாவசிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.

அதுமட்டுமில்லாமல் மரணம் சம்பந்தமாக வாக்குமூலம் கொடுக்கும்போது சம்பந்தப்பட்ட அனைவரும் தெளிவாக ஒரேமாதிரியான வாக்குமூலத்தை வழங்கவும்.

தடுமாற்றத்துடன் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட வாக்கு மூலங்களை கொடுப்பதால்  மரணத்தில் சந்தேகப்பட்டு மேலதிக விசாரணை என்று ஜனாசாவை வைத்தியசாலைக்கு எடுத்து செல்வர். ( எடுத்தும் செல்லபட்டுள்ளது)

இதனால் ஜனாசாவை அடக்கம் செய்வதில் தாமதம் மற்றும் அழைக்கழிப்புக்குள்ளாக வேண்டியேற்படும்.

ஒருவர் மரணித்தால் அதனை அடக்கம் செய்வதற்கு முன்னதாக என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை மக்களுக்கு சரிவர அறிவூட்டப்படாத்தன் விளைவாக வழமையாக செய்ததை மக்கள் செய்ய முற்படுகின்றனர்.

கடந்த காலங்கிலும் அமுலில் இருந்த வழிமுறைகளை கண்டு கொள்ளாமல் இருந்த அதிகாரிகள் தற்போது சட்டத்தை அமுல் படுத்த கடுமையாக இருக்கின்றனர்.

இதே சமயம் சட்டத்தை கடுமையாக முன்வைக்கும் அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதையும் காண முடிகிறது. இலஞ்சம் பெற்றுக்கொண்டாலும் ஓரளவு அலைக்கழிப்பை தந்துவிட்டே ஜனாசாவை ஒப்படைக்கின்றனர்.

எது எப்படி போனாலும் வீட்டில் மரணம் சம்பவித்தால் ஊரில் அனுபவமுள்ளவர்களை அனுகி ஒத்துழைப்புகளைப்பெற்றுக் கொள்ளவும்.

தகவல்,
சுல்பி சமீன்
13-07-2017
அவசரமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. (சமீபத்தில் ஜனாசா அடக்கம் செய்வதில் ஏற்பட்ட அசௌகரியங்கள்) அவசரமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய  செய்தி. (சமீபத்தில்  ஜனாசா அடக்கம் செய்வதில் ஏற்பட்ட அசௌகரியங்கள்) Reviewed by Madawala News on 7/13/2017 06:59:00 PM Rating: 5