Kidny

Kidny

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் சமாதான நீதவான்களின் தகவல்கள் திரட்டப் படுகின்றன.


பி. முஹாஜிரீன்

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் சமாதான நீதவான்களின் தகவல்கள் திரட்டப்பட்டு அவற்றை ஆவணப்படுத்தும் திட்டத்திற்கமைய 'அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் சமாதான நீதவான்கள் ஒன்றியம்' சமாதான நீதவான்களின் விபரங்களைக் கோரியுள்ளன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமையாற்றும் சமாதான நீதவான்களினதும் விபரங்கள் திரட்டப்படுவதுடன் சமாதான நீதவான்களுக்கான பொது அமைப்பொன்றை செயற்படுத்தவும், அவர்களது செயற்பாடுகள், கடமைகள், அதிகாரங்கள் தொடர்பில் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்தி நெறிப்படுத்தவும்;, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அல்லது பிரச்சினைகள் தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொள்ளவும், எதிர்கால திட்டங்களை வகுத்துச் செயற்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் பிரதிநிதி கவிஞர் ஈழமதி ஜப்பார் (பி.எம்.கே. றஹ்மதுல்லாஹ்) தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக சமாதான நீதவான்களின் தகவல்கள், சுயவிபரங்கள் அடங்கிய 'விபரக் கொத்து' ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் சமாதான நீதவான்கள் தங்களது சுய விபரங்கள் அடங்கிய தகவல் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் பி.எம்.கே. றஹ்மதுல்லாஹ், இல 70, வம்மியடி வீதி, அட்டாளைச்சேனை – 12 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் மேலதிக விபரங்களுக்கு 0758394317, 0772985024 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் சமாதான நீதவான்களின் தகவல்கள் திரட்டப் படுகின்றன. அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் சமாதான நீதவான்களின் தகவல்கள் திரட்டப் படுகின்றன. Reviewed by Madawala News on 7/18/2017 07:00:00 AM Rating: 5