Kidny

Kidny

மத்திய மாகாண விளையாட்டுப் போட்டி... கண்டி மாவட்டம் சம்பியன்.


( மொஹொமட் ஆஸிக்)

43  வது தேசிய விளையாட்டு விழாவுக்கு  சமாந்திரமாக நடை பெற்ற மத்திய மாகாண விளையாட்டுப் போட்டியில் கண்டி மாவட்டம் சம்பியனாக  தெரிவானதுடன்  மாத்தளை மாவட்டம் இரண்டாவது  இடத்தை  பெற்றுக கொண்டது.

கண்டி திகனயில் அமைநதுள்ள மத்திய மாகாண விளையாட்டு  மைதானத்தில் இப போட்டிகள்   நேற்று  09  ம்  திகதி இடம்  பெற்றது.
 இப் போட்டித் தொடரில் 113  தங்க பதக்கங்களையும் 97  வௌ்ளி பதக்கங்களையும் 102   வென்கள  பதக்கங்களையும்  பெற்ற கண்டி மாவட்டம்  சம்பியநாகியதுடன் , 3  தங்க பதக்கங்களையும், 26   வௌ்ளி பதக்கங்களையும்,23  வென்கள பதக்கங்களையும்  பெற்ற மாத்தளை மாவட்டம் இரண்டாம் இடத்தையும்  பெற்றுக் கொண்டது.

இப்   போட்டிகளில வெற்றி பெற்ற கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட அனிகளுக்கு மத்திய மாகாண முதலமைச்சர் சரத்  ஏக்கநாயக்க   கேடயங்களை வழங்கியதை  இஙகு  கானலாம்.

மத்திய மாகாண விளையாட்டுப் போட்டி... கண்டி மாவட்டம் சம்பியன்.  மத்திய மாகாண விளையாட்டுப் போட்டி... கண்டி மாவட்டம் சம்பியன். Reviewed by Madawala News on 7/10/2017 08:41:00 AM Rating: 5