Ad Space avaiable

டெங்கு நோயை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம். நாளை (ஞாயிறு) மடவளையில்.


டெங்கு நோயை ஒழிப்பதற்கான பொது வேலைத்திட்டம்.

மடவளையில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் செயற்திட்டம் ஒன்றை Madawala Development Society ஆனது பாத்ததும்பர பிரதேச சபை, வத்தேகம பொலிஸ், பொதுச்சுகாதாரப் பிரிவு(PHI), MOH மற்றும் ஊர் நலன் விரும்பிகளின் துணையுடன் ஆரம்பித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.


டெங்கு நோயை ஒழிப்பதற்கான இத்தொடர் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வும், சிறமதானம் மற்றும் பொது அறிவூட்டல் நிகழ்ச்சி ஆகியன இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 30.07.2017ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மடவளை பஸார் அமைந்துள்ள 'கொழும்பு சுபர்' வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மத்திய மாகான சபை உறுப்பினர் அல்-ஹாஜ் அப்துல் முத்தலிப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்படும் டெங்கு நோயை ஒழிப்பதற்கான இத்தொடர் வேலைத்திட்டத்தில் அனைத்து ஊர் நலன்விரும்பிகள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு எமது ஊரை சுத்தப்படுத்தி வளமான ஆரோக்கிய சூழல் ஒன்றைக் கட்டியெழுப்ப பங்களிப்பு விளங்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

President
Madawala Development Society
டெங்கு நோயை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம். நாளை (ஞாயிறு) மடவளையில். டெங்கு நோயை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம். நாளை (ஞாயிறு) மடவளையில். Reviewed by Madawala News on 7/29/2017 11:53:00 PM Rating: 5