Kidny

Kidny

மல்லவப்பிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் வழக்கு... நேற்று நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் முழு விபரம் இதுதான்.


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

குருநாகல் மல்லவப்பிட்டிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு பள்ளிவாசலை சேதத்துக்குள்ளாக்கிய குற்றச் சாட்டின் மீது குருநாகல் பொலி லாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இரு வரையும்,போதிய சாட்சியங்கள் இன்மை காரணமாக குருநாகல் பிரதான நீதிவான் நீதிமன்ற நீதி பதி சம்பத் ஹேவாவசம் குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்தார்.

குருநாகல், ஹெட்டுவா னேயைச் சேர்ந்த உபுல் கம்லத் மற்றும் சுபுன்சமீர ஆகிய இரு வருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி அதிகாலை குருநாகல் - கண்டி வீதியில் அமைந்துள்ள மல்லவப்பிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக் குதல் மேற்கொண்டதாக குறிப் பிட்ட இருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பள்ளிவாசலில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.ரி.வி. கமரா பதிவுகளும் பொலிஸாரினால் பெறப்பட்டிருந்தன.

இவர்கள் இருவரும் பொதுபலசேனா வுடன் தொடர்புபட்டவர்கள் என்பதனால் முஸ்லிம் பள்ளி வாசல் மீது தாக்குதல் மேற் கொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிபதியின் உத்தரவின்படி சி.சி.ரி.வி.கமராப் பதிவுகள் இரசாயனப் பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்காக அனுப் பப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட பதிவுகளில் சந்தேக நபர்கள் எவரோ வாகனமோ தெளிவாக இல்லை என இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததைய டுத்து நீதிவான் சம்பவத்துடன் தொடர்புபடாத இளைஞர்களை கைது செய்ததற்காக பொலிஸாரை எச்சரித்து சந்தேக நபர்கள் இருவரையும் விடுலை செய்தார்.

அத்தோடு உண்மையான சந்தேக நபர்கள் தொடர்ந்தும் வெளியில் சுதந்திரமாக இருக்கி றார்கள். அவர்களை உடனடி யாக கைது செய்து நீதிமன்றின் முன் நிறுத்தும்படி பொலிஸா ருக்கு உத்தரவிட்டார். குறிப்பிட்ட சந்தேக நபர்கள் இருவரும் சம்பவதினத்தன்று கதிர்காமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு தங்கியிருந்ததற்கான சி.சி.ரி.வி கமரா பதிவுகளை சந்தேகநபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

மல்லவப்பிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் வழக்கு... நேற்று நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் முழு விபரம் இதுதான். மல்லவப்பிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் வழக்கு... நேற்று நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் முழு விபரம் இதுதான். Reviewed by Madawala News on 7/27/2017 09:20:00 AM Rating: 5