Ad Space avaiable

பாகிஸ்தானில் 3 முறை பிரதமரான நவாஸ் ஒருமுறை கூட பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை.


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

‘பனாமா கேட்’  ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு இன்று பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், ஊழல் வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு.

பாகிஸ்தானில் பஞ்சாப் சிங்கம் என அறியப்படும் நவாஸ் செரீப், அரசியல் நிலையின்மை கொண்ட பாகிஸ்தானின் வரலாற்றில் மூன்று முறை பிரதமர் ஆகி உள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் பிரதமர் பதவியில் இருந்து அவர் அகற்றப்பட்டு வருகிறார். முதலில் ஜனாதிபதியால், பின்னர் ராணுவத்தால் இப்போது நீதித்துறையால் அவர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் அதிகாரம் நிறைந்த அரசியல் குடும்பம் நவாஸ் செரீப் குடும்பம், அவருடைய கட்சியான பிஎம்எல்-என் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்) இப்போது ஆட்சியில் உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் நவாஸ் செரீப் சுனாமிக்கு இடையே நீந்திவந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு வலையில் வசமாக சிக்கிக் கொண்டார். பனாமா கோட் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நவாஸ் செரீப்பின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவு.

பாகிஸ்தான் பொருளாதார பிரச்சனை மற்றும் பயங்கரவாத பிரச்சனைக்கு எதிராக போரிடு வரும்நிலையில் மீண்டும் ஒரு நிலையின்மை ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் நிலவி வரும் பயங்கரவாதம், பொருளாதாரம் போன்ற பிரச்சனையால் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவில்லை. முன்னதாக பிரதமராக இருந்த போது அவருடைய குடும்பத்தார் வெளிநாட்டில் சொத்து குவித்தது தொடர்பான தகவல்கள் பனாமா கேட் மூலம் தெரியவந்து விசாரணையை அடுத்து பதவி பறிபோய் உள்ளது.

நவாஸ் செரீப் முதல் முறையாக 1990-1993 கால கட்டங்களில் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். அப்போது அப்போதைய அதிபர் குலாம் இஷ்காக் கானுடன் மோதல் போக்கு ஏற்பட்டதை அடுத்து அவருடைய ஆட்சி ரத்து செய்யப்பட்டது. பின்னர் அழுத்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார் நவாஸ் செரீப். பின்னர் 1997-ல் பிரதமர் ஆனார். அப்போதும் அவரு முழு பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை. 1999-ம் ஆண்டு அவருடைய ஆட்சியை அப்போது ராணுவ அதிகாரம் கொண்ட பர்வேஷ் முஷாரப்பால் வெளியேற்றப்பட்டார்.
பாகிஸ்தானில் 3 முறை பிரதமரான நவாஸ் ஒருமுறை கூட பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை. பாகிஸ்தானில் 3 முறை பிரதமரான நவாஸ் ஒருமுறை கூட பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை. Reviewed by Madawala News on 7/28/2017 07:49:00 PM Rating: 5