tg travels

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தன்னுடைய கடும்போக்கைக் கைவிட வேண்டும்.


“இடம்பெயர்ந்து, வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள், தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிக்கும் உரிமை தொடர்பான விடயத்தில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நெகிழ்வுப் போக்கைக் ​கடைப்பிடிக்க வேண்டும்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற, தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், நீதியமைச்சர், தேர்தல்
ஆணைக்குழு அதிகாரிகளுடன் மூன்றுவருடங்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக, நான்கு வருடங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட தற்காலிக ஏற்பாடாக, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், வேறு மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், தங்களுடைய சொந்த மாவட்டங்களில், வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், அது நான்கு வருடங்களுக்கு தற்காலிகமானதாகவே உள்ளது.

“ஆகையால், ​இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தன்னுடைய கடும்போக்கைக் கைவிட்டுவிட்டு, நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தன்னுடைய கடும்போக்கைக் கைவிட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தன்னுடைய கடும்போக்கைக் கைவிட வேண்டும். Reviewed by Madawala News on 7/05/2017 09:45:00 AM Rating: 5